வேறொருவரால் விளையும் பாதிப்பு Jeffersonville, Indiana, USA 62-10-13 1. நன்றி சகோ. நெவில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மாலை வணக்கம் நண்பர்களே. மறுபடியுமாக இன்றிரவு இக்கூடாரத்துக்கு வந்து நம்முடைய கர்த்தரும் அருமை இரட்சகருமானவரைக் குறித்து பேசுவது மிகவும் நன்றாயுள்ளது. நாம் அனைவரும் அவரிடத்தில் அன்பு கூறுகிறோம் என்னும் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அவரிடத்தில் நாம் அன்பு கூராதிருந்தால், இந்த உஷ்ணமான கட்டிடத்தில் இவ்விதம் நெருக்கிக் கொண்டு இருக்கமாட்டோம். இங்கு நாம் வந்துள்ள நோக்கமே, நாம் அவர் பேரில் வைத்துள்ள அன்பை தெரியப்படுத்தவே. அவர் வருகையின் நேரம் நெருங்குகிறது என்று நாம் நினைத்துப் பார்க்கும் போது, நம்முடைய எதிர்பார்த்தல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அவருடைய வருகைக்கான அடையாளங்களை நாம் காணும் போது, அவரை நாம் காணவிருக்கும் அந்த மகத்தான நேரத்துக்காக நாம் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். 2 சென்ற ஞாயிறு இங்கு நான் வந்து சென்ற பிறகு, ஒரு வாரத்துக்குள் இன்னும் சிலர் அவரை சந்திக்க சென்றுவிட்டனர். அவர்களில் ஒருத்தி திருமதி ஃபோர்ட், திருமதி லேவி ஃபோர்ட். அவர்களுக்கு எண்பது வயது. விலையேறப் பெற்ற அம்மையார். அவர்களுடைய கணவர் சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவர் ஸ்பானிய அமெரிக்க போரில் போர் புரிந்த இராணுவ வீரர். இந்த அம்மையாரின் மகனின் பெயரை என் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறேன். அவன் தான் எனக்காக அந்த 'சூட்'டை, அவன் அணியும் 'சூட்'டை அவன் அணிந்த பிறகு எடுத்து வைத்தவன். அது ஆண் சாரணர் அணியும் 'சூட்' என்று நினைக்கிறேன். அவன் அதைப் பெற்றுக் கொள்ள நான் சென்ற போது, கால் சட்டையில் ஒரு கால் மாத்திரமே இருந்தது. 3 லாயிட் ஒரு வேளை இன்றிரவு இங்கிருக்கக் கூடும் அதே பையன். அன்று அவனுடைய தாயாரின் சவ அடக்கம் நடந்தது. அவன் என்னிடம், “பில்லி, என் தாயார் மறுபடியும் உயிரோடெழுந்திருப்பார்கள் என்பதை நிரூபிக்கும் ஒன்றை நீர் பேசினால் நலமாயிருக்கும்'' என்றான். கர்த்தர் அதை உறுதிப்படுத்தும் ஒரு செய்தியை எனக்களித்தார். வேதமும், இயற்கை அனைத்தும், தேவன் சிருஷ்டித்த எல்லாமே அந்த அம்மையார் உயிரோடெழுந்திருப்பார்கள் என்பதை எடுத்துரைக்கும் போது, அதற்கு விரோமாக யார் பேசக் கூடும்? தேவன் அதை உரைத்து, அவருடைய இயற்கையைக் கொண்டும், அவருடைய வார்த்தையைக் கொண்டும், அந்த அம்மையாரின் வாழ்க்கையைக் கொண்டும், மற்றெல்லாவற்றைக் கொண்டும் நிரூபித்திருக்கும் போது, அவர்கள் உயிரோடெழுந்தே ஆக வேண்டும், பாருங்கள், வேறு வழியேயில்லை, வேறெதுவும்... வானமும் பூமியும் தவறிப் போகும், இது ஒருக்காலமும் தவறாது. அவர்கள் உயிர்த்தெழ வேண்டும். 4 நேற்றைக்கு முந்தினநாள், என்னுடன் முன்பிருந்த மேலாளர் திரு. பாக்ஸ்டர் (உங்களில் பலருக்கு அவரை நினைவிருக்கும், அவர் மேடையில் பேசியிருக்கிறார்) அவர்களின் மனைவி இருதய வியாதி காரணமாக திடீரென்று இறந்து போனாள். அவர் மிகவும் அதிர்ச்சியடைந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார். நீங்கள் சகோ. பாக்ஸ்டரை உங்கள் ஜெபங்களில் நினைவு கூருவீர்கள் என்று நம்புகிறேன். அவர் நமது சகோதரர்களில் ஒருவர். அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான் கூவரில் வசிக்கிறார். அவர் அநேக வருடங்களாக என்னுடன் இல்லை. அவருடைய மனைவிக்கு ஒரு விதமான நரம்பு தளர்ச்சி ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். பிறகு திடீரென்று இருதய வியாதி கண்டு இறந்து போனாள். எந்த நேரத்தில் அழைப்பு வருமென்று நமக்குத் தெரியாது. அது - அவர் அழைக்கும் போது, நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஆகையால் தான் இன்றிரவு நாம் இங்கு வந்திருக்கிறோம். 5 நான் படிக்கும் அறையில் இல்லை அலுவலகத்தில் - திரு. மூருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னை வருந்தி அழைத்தார்... நான்... நன்றி செலுத்தும் நாளன்று அங்கு போக வேண்டாமென்று நினைத்து, எவ்வளவோ முயன்று பார்த்தேன். நன்றி செலுத்தும் நாளன்று இங்கு கூட்டம் நடத்திவிட்டு, அதன் பிறகு ஷ்ரீவ் போர்ட்டுக்கு போகலாமென்று எண்ணினேன். ஆனால் அப்பொழுது அங்கு செல்வதற்கு எனக்கும் நேரம் கிடைக்காது. முடிவில் அவர், ''நீங்கள் மூன்று கூட்டங்களை இப்பொழுது இங்கு நடத்தி, பின்னர் ஏழு முத்திரைகளின் பேரில் பிரசங்கம் செய்ய எண்ணம் கொண்டிருந்தால், அந்த ஒரு நாளை எங்களுக்குத் தரலாமே என்றார். நாங்கள் அவருக்கு அந்த வெள்ளி, சனி, ஞாயிறு தரலாமென்று எண்ணியிருந்தோம். இப்பொழுது வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு தருவதாக அவருக்கு வாக்களித்துவிட்டேன். அது... லூயிசியானாவில் பெந்தெகொஸ்தேவுக்கு ஐம்பது ஆண்டுகள் ஆயிருக்கும் நன்றி செலுத்தும் நாள். அது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு லூயிசியானாவில் விழுந்தது. 6 ஞாயிறு பள்ளி இல்லாதவர் நாளை காலை இங்கு வரும்படி அவர்களை ஒருவிதம் வற்புறுத்தப் போகிறோம். நமது விலையேறப்பெற்ற சகோதரர் டான் ரட்டல் இங்குள்ளதைக் காண்கிறேன். அவருக்கு நாளை காலையில் ஞாயிறு பள்ளி உள்ளதென்று எனக்குத் தெரியும். சுற்று வட்டாரங்களிலிருக்கின்ற போதகர்களுக்கு ஞாயிறு பள்ளி இருக்க வகையுண்டு. உங்களுக்கு ஞாயிறு பள்ளி இருக்குமானால், அங்கு செல்லுங்கள். அப்படி இல்லாதிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு எங்களோடிருக்க விருப்பமானால், ''நான் நாளை காலை கரும்பலகை ஒன்றை வைத்து, ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சி“ என்னும் பொருளின் மேல் கற்பித்து, அதை கரும்பலகையில் வரைந்து காட்டி, தேவனுடைய தேவைகள் என்னவென்றும், நாம் எப்படி தேவனுக்கு முன்பாக பரிபூரண வளர்ச்சியுள்ளவர்களாய் காணப்பட முடியும் என்றும் காண்பிக்க விரும்புகிறேன். 7 அதன் பிறகு நாளை இரவு, கர்த்தருக்கு சித்தமானால் என் வழிகாட்டி என்னும் பொருளின் மேல் பேச விரும்புகிறேன். நகரத்திற்கு வெளியேயிருந்து உங்களில் சிலர்... நாங்கள் நேரத்தோடே இந்த ஆராதனைகளைத் தொடங்க விரும்புகிறோம்... நான் போதகரிடம் இதைக் குறித்து இன்னும் பேசவில்லை. நீங்கள் ஞாயிறு பள்ளியை நாளை காலை நேரத்தோடே தொடங்குவது நல்லது. நாளை இரவு ஆராதனையை கூடுமானால் 6.30 மணிக்கே தொடங்கிவிடலாம். அப்பொழுது மாலை ஆராதனைக்கு தங்கிப் போக விரும்புகிறவர்களுக்கு அது தருணத்தையளிக்கும்... நாம் 8.30 மணிக்கெல்லாம் முடித்துவிடலாம். அப்பொழுது உங்களில் சிலர்... 8 இன்று ஒரு ஸ்திரீயை சந்தித்தேன். அவள் காரோட்டி மூன்று அல்லது நான்கு, ஏறக்குறைய... நாம் 8 அல்லது 8.30 மணிக்கு ஆராதனை முடித்து வெளியேறினால், அவள் அடுத்த நாள் காலை 2.30 அல்லது 3.00 மணிக்கு வீடு சேருவாள் என்றும், அவளுடைய கணவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறினாள். நாமும் சும்மா சுற்றிக் கொண்டிருப்பதை தவிர வேறொன்றும் செய்யப் போவதில்லை. எனவே நாம் சபைக்கு நேரத்தோடே வருவோம்... உங்களுக்குத் தெரியுமா, இதைக் குறித்து ஒரு பிரத்தியேக உருவம் (form) நமக்குத் தேவையில்லை. தேவன் உருவம் இல்லாதவர் என்று உங்களுக்குத் தெரியும். வேதாகமம், எனவே, இங்கு வரக் கூடியவர் அனைவரும் நேரத்தோடே வருவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் சொந்த ஆராதனை இருக்குமானால்; ஞாபகம் கொள்ளுங்கள், இது சர்வ ஸ்தாபனத்தினரும் ஒன்று கூடும் கூடாரம். ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து இங்கு வருகின்றனர். இங்கு வருபவர் பெரும்பாலும் நகரத்துக்கு வெளியேயுள்ளவர்களே. 9 இங்கு அந்நியர் எவராகிலும் இருக்க நேர்ந்தால், உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன். நான் இப்பொழுது மேடைக்கு வந்தபோது, எனக்கு தெரிந்தவர் பத்து பேர் கூட இங்கில்லை என்று காண்கிறேன். ஜெபர்ஸன்வில்லுக்கு வெளியேயிருந்து வந்தவர் எத்தனை பேர்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். பாருங்கள், தொண்ணூற்றொன்பது சதவிகதம். பாருங்கள், பாருங்கள்? இவர்கள் நண்பர்கள். நூறு மைல் தொலைவிலிருந்து வருபவர் எத்தனை பேர்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். நூறு மைல் தொலைவிலிருந்து வருபவர்கள் ஐம்பது சதவிகிதம் பேர். இருநூறு மைல் தொலைவிலிருந்து வருபவர் எத்தனை பேர்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். முந்நூறு மைல் தொலைவிலிருந்து வருபவர் கரங்களையுயர்த்துங்கள். அங்கு பாருங்கள், நானூறு மைல் தொலைவிலிருந்து வருபவர் கரங்களையுயர்த்துங்கள். இங்கு பாருங்கள், ஐந்நூறு மைல் தொலைவிலிருந்து வருபவர் கரங்களையுயர்த்துங்கள். அங்கு பாருங்கள், சபையோரில் மூன்றிலொரு பாகம் ஐந்நூறு மைல்தொலைவிலிருந்து வருபவர். பாருங்கள். இவர்கள் சுற்றிலுமிருந்து இங்கு வந்து ஒன்றுகூடும், நண்பர்களே. எனவே நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இங்கிருக்கிறோம். எங்களால் முடிந்த அனைத்தும் உங்களக்குச் செய்ய நாங்கள் இங்கிருக்கிறோம். 10 சற்று முன்பு என் மகன் என்னிடம் கொடுத்த ஒரு ஸ்திரீ எழுதின கடிதத்தை படித்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு ஜெபிக்கப்படும் என்னும் நம்பிக்கையோடு அவள் முப்பத்தைந்து தரம் இங்கு வந்துவிட்டாள் என்றும், ஒவ்வொரு தரமும் அவள் நூற்றுக்கணக்கான மைல்கள் காரோட்டி இங்கு வருவதாகவும் எழுதியிருக்கிறாள். முப்பத்தைந்து பிரயாணங்கள். ஞாபகம் கொள்ளுங்கள், பேட்டிகளைப் பெற உலகம் முழுவதிலுமிருந்து அறுநூறு சொச்சம் பேர் காத்திருக்கின்றனர்... காத்திருப்பவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பாருங்கள்... அது மிகவும் சிக்கலானது. இங்குள்ளவரின் நிலைமையை அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது அதிகம் இல்லை எனலாம். அதை நாம் கேட்டோம். அது உலகம் முழுவதும். எனவே நாம்... 11 அந்த ஸ்திரீ இன்றிரவு கட்டிடத்தில் இருக்கிறாளா என்று தெரியவில்லை (முப்பத்தைந்தாம் பயணம்), நாளை இங்கு வருவேன் என்று கடிதம் எழுதியவள். அவள் முப்பத்தைந்து தரம் இங்கு வந்தும் கூட, அவளுக்காக ஜெபிக்கப்படவில்லை. அவள் கட்டிடத்தில் இல்லை என்று நினைக்கிறேன். அவள் ஒருக்கால் வரவில்லை போலும். அவள் கடிதத்தை சற்று முன்பு படித்துக் கொண்டிருந்தேன். இங்கு வரும் போதெல்லாம் நான் எப்பொழுதுமே... இங்குள்ள போது... ஏதோ ஒன்றை பேச வேண்டுமென்றோ அல்லது ஜனங்களைப் பிரீதிப்படுத்தும் ஒன்றையோ நான் பேசினதில்லை... தேவனுக்கு பிரீதியாயிருந்து, ஜனங்களுக்கு உதவி செய்யக் கூடிய ஒன்றையே நான் பேசி வந்திருக்கிறேன் (பாருங்கள்?). நாம் எல்லோரும், நாம் எந்த சபையை அல்லது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாயிருந்தாலும், தேவனுடன் நெருங்கி நடக்க உங்களுக்கு அது உதவியாயிருக்க வேண்டும் என்பதற்காகவே. நாம் இங்கு வந்துள்ள காரணமே அதுதான். தேவனுடன் நெருங்கி நடத்தல். நாள் அதிக தாமதமாகிவிட்டதென்றும் கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளதென்றும் நாம் காணும் போது... இன்று என் மனைவியிடம் நான், “எங்காவது எழுப்புதல் நடக்காமல் போனால், நான் அழிந்துவிடுவேன். என்னால் இனிமேல் பொறுத்திருக்க முடியாது. நான்... எனக்குள் ஏதோ ஒன்று கொழுந்துவிட்டு எரிகிறது” என்றேன். 12 ஓ, இப்பொழுது தான் தொடர்ச்சியாக நடந்த கூட்டங்களை முடித்துக் கொண்டு வந்தோம். ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டங்களுக்கு வந்திருந்தாலும், அங்கு எழுப்புதல் இல்லாமல் போனால், நாங்கள் கென்டக்கியில் அழைப்பது போல், அது காரணமின்றி நீட்டி வளர்த்த கூட்டமாகிவிடும் (protractive meetings). கர்த்தருடைய ஆவி ஜனங்களின் மேல் அசைவாடி, ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்திற்கென பெரிய காரியங்கள் சாதிக்கப்படும் ஒரு எழுப்புதலையே நாம் விரும்புகிறோம். 13 இப்பொழுது, ஜெப ஆராதனைகளில், வழக்கமாக நாம்... இங்கு ஏன் நாம் ஜெப வரிசையை அமைக்க இயலாதென்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். பாருங்கள், ஜன நெருக்கடி அதிகமாக உள்ளதால் அப்படி செய்ய இயலாது. ஆனால் வழக்கமாக ஜெப வரிசையில் வருபவர்கள் கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதைக் கண்டு கொள்கின்றனர். கர்த்தராகிய இயேசு சிறிதளவும் கூட மாறவில்லை என்பது நாம் கண்டறிந்த உண்மை. அவர் முன்பிருந்தது போலவே இன்றும் இருக்கிறார், என்றும் இருப்பார். வேதாகமம் எபிரேயர் 13:8-ல், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றுரைக்கிறது. அவருடைய நாட்களில் அவர் பேசுவதைக் கேட்க ஒன்று கூடினவர்கள் ஒருக்கால் ஜெப வரிசையில் வந்திருக்கமாட்டார்கள். விசுவாசிக்க அவர்களுக்கு போதிய விசுவாசம் இருந்திருக்கும். அவர்களுடைய விசுவாசம் அவரைத் தொடும் போது, நம்முடைய கர்த்தர் அவர்களிடம் திரும்பி, அவர்களுக்கு இன்னின்ன கோளாறு என்றும், அல்லது அவர்கள் இன்னின்னதை செய்தனர் என்றும் கூறி, அவர்களிடம் சுகமடைந்து செல்லும் படி கூறியிருப்பார், அல்லது ஏதாவதொன்றை சரி செய்யும்படி கூறியிருப்பார். 14 கிணற்றருகில் இருந்த ஸ்திரீயைக் குறித்தும். பெரும்பாடுள்ள ஸ்திரீயைக் குறித்தும் நாம் அறிந்திருக்கிறோம். ஓ, எத்தனையோ பேர்கள், குருடன் பர்த்திமேயு, அவர்களுடைய விசுவாசம் அவரைத் தொட்டது. இன்றிரவும் கூட அவர் நமக்காக பரிந்து பேசும் ஆசாரியராக, என்றும் போல் இன்றும் பெரியவராயிருக்கிறார். நாம் அவருடைய ஊழியக்காரராக இருப்பதற்கு நம்மை அனுமதித்துக் கொள்ள வேண்டும். அவர் திராட்சை செடி ஜீவனின் மூல கர்த்தார். அந்த ஜீவனைப் பெறும் கொடிகளாக நாம் இருக்கிறோம். கொடிகள் தான் கனிகளைக் கொடுக்கின்றன, செடியல்ல. கிறிஸ்து தமது சபையின் மூலமாக கிரியை செய்கிறார். நம்மை நாம் பரிபூரணமாக ஒப்புவித்து, பரிசுத்த ஆவியானவர் நாம் கிறிஸ்துவின் மேல் கொண்டுள்ள விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டு நம்மை முழுவதும் அவருடைய ஆதிக்கத்துக்குள் கொண்டு வர அனுமதிப்போமானால், அவர் அதையே செய்வார். ஏனெனில் அது கிறிஸ்து. 15 நீங்கள் எங்கள் மத்தியில் வந்துள்ள அந்நியராயிருந்தால்... வழக்கமாக இங்குள்ளவர்கள்... இந்த கூடாரத்திலுள்ளவர்கள்... இங்குள்ள எங்கள் போதகர் ஏறக்குறைய ஒவ்வொரு இரவும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறார். நம்முடைய கிருபை பொருந்திய அருமையான போதகர் சகோ. நெவிலிடம் நீங்கள் ஜெபம் செய்து கொள்ளுங்கள். சகோ. ஆர்மன் நெவில் ஏறெடுக்கும் ஜெபங்களை தேவன் கேட்டு அதற்கு உத்தரவு அருளுகிறார். சகோ. டான் ரட்டல் இன்னும் மற்ற சகோதரர்களும் கூட வியாதியஸ்தருக்காக ஜெபிக்கின்றனர். மற்றும் சகோ. ஜாக்ஸன், ஹாவர்ட் பார்க்கிலுள்ள மற்ற கூட்டாளி சபையின் போதகர், இங்கு எங்கோ இருக்கிறார் என்ற நினைக்கிறேன். இப்பொழுது ஜன நெருக்கடி அதிகமாயுள்ளதால், நீங்கள் தேவனை விசுவாசித்தால்... உங்கள் தேவை எதுவானாலும்... நீங்கள் அந்நியர், உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் தேவனிடம் கேட்டு, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரா என்று காணுங்கள். பாருங்கள், அவர் உடனே உத்தரவு... அவர் உங்களை அறிந்திருக்கிறார். உங்களுடைய கோளாறு என்னவென்று அவருக்குத் தெரியும். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று... அவரை விசுவாசிப்பதே. அப்பொழுது அவர் உங்களை ஒரு கருவியாகவும் என்னை வேறொரு கருவியாகவும் உபயோகிப்பார். இயேசு யோவான் 14:12ல், ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்“, என்று உரைத்திருக்கிறார். அது முழுவதும் தன்னை ஒப்புவித்த பாண்டம். 16 தேவன், பரிசுத்த ஆவி... உங்கள் மூலம் கிரியை செய்யத்தக்கதாக நீங்கள் எப்படி அந்த பாண்டமாக ஆகலாம் என்பதை நாங்கள் கற்றுத்தரப் போகிறோம். எனவே... பாருங்கள், அவர் தேவன் அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தார். அதன் பிறகு அவர் தமது குமாரன் கிறிஸ்து இயேசுவுக்குள் வாசம் செய்தார், இப்பொழுது அவர் சபையில் இருக்கிறார். ஒரு காலத்தில் அவர் பிதா என்று அழைக்கப்பட்டார், பிறகு குமாரன், இப்பொழுது பரிசுத்த ஆவி. அது தேவன் தம்மை உலகிற்கு வெளிப்படுத்திக் காண்பிப்பதாகும். அவர் சபைக்குள் நுழையக் கூடிய ஒரே வழி, அவர் சபைக்காக முதலில் மரித்து அதை பரிசுத்தம் பண்ணி, அதன் பிறகு தம்மை அவருடைய சபையின் மூலம் வெளிப்படுத்திக் காண்பிப்பதே. அவர் யோவான் 15-ம் அதிகாரத்தில், ''நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்'' என்றார். கொடிதான் கனி கொடுக்கிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 17 இப்பொழுது நாம் இன்றிரவு பாடத்தை தொடங்குவதற்கு முன்பு... உங்களை நீண்ட நேரம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் ஜனங்கள் நின்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். ஒருவர் இருக்கையை விட்டு எழுந்திருப்பதும், வேறொருவர் அதில் உட்காருவதுமாய் உள்ளனர். இன்னும் முன்னூறு அல்லது நானூறு பேர்கள் உட்காருவதற்கு வசதியளிக்க அனுமதி பெற நாங்கள் கடினமாக முயன்று வருகிறோம். ஆனால் நகரத்தார் அதையளிக்க மறுக்கின்றனர். ஏனெனில் வாகனங்களை நிறுத்துவதற்கு நம்மிடம் போதிய இடமில்லை என்பதால். இந்தியானா போலீஸிலிருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால் நகரத்தார்... நமக்கு வானகங்களை நிறுத்த இடம் வேண்டும். ஓ, நாம் நான்கு பேர்களுக்கு இடவசதி அளித்தால், ஒரு காரை வெளியே நிறுத்தியாக வேண்டும். இங்குள்ள வாகனங்கள் நிறுத்தும் இடம் உண்மையில் நகரத்தாருக்கு சொந்தமானது. எனவே, பாருங்கள், அவர்கள். நமது சபை நகரத்தாரின் எல்லைக்கு ஒரு அடி தூரமேயுள்ளது. உண்மையில், நெடுஞ்சாலை, அது இங்கு கட்டப்பட்டிருக்கும் காரணம். இங்குள்ள உங்களில் சிலருக்கு, முக்கியமாக இளைஞர்களுக்கு, இது தெரியாமலிருக்கலாம். இது ஒரு சிறு குளமாக இருந்தது. எனக்கு நினைவுக்கு வருகிறது, நான் சிறுவனாயிருக்கையில் இங்கு வருவது வழக்கம். அப்பொழுது நாங்கள் குளத்தை சுற்றிதான் வயலுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் நெடுஞ்சாலையை குளத்தை சுற்றிக் கட்டினர். இந்த இடத்தை நான் விலைக்கு வாங்கினேன். இப்பொழுது இது உள்ள இடத்தில் நான் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, இந்த இடத்தை வாங்கும்படி கர்த்தர் என்னிடம் கூறினார். அது முப்பது அல்லது முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். பெரிய சேற்று நிலமும், என் தலைக்கு மேல் கோரைப் புல் வளர்ந்திருந்த இந்த இடத்தை... நான் நூற்று அறுபது டாலர்களுக்கு வாங்கினேன் இங்குள்ள இந்த மூலை இடத்தை வாங்கி சபை கட்டிடத்தைக் கட்டினேன். 18 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. (இதை பொருள் என்று அழைக்க முடியுமானால்) குறிப்பு புத்தகத்தில் எழுதிவைத்துள்ள அதனுடன் சம்பந்தப்பட்ட சிலவற்றைப் படிக்க விரும்புகிறேன். இன்றிரவு கூட்டத்தினரிடையே வேறொருவரினால் விளையும் பாதிப்பு என்னும் பொருளின் மேல் பேச விரும்புகிறேன். நாம் பேசுவதற்கு அல்லது வசனத்தை படிக்கும் முன்பு, நாம் தலைகளை வணங்கி, வார்த்தையின் ஆதிகாரணருடன் பேசுவோம். நம்முடைய தலைகளும் இருதயங்களும் கூட... பயபக்தியுடன் அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில் வணங்கப்பட்டுள்ள இந்நேரத்தில் இங்கு யாருக்காகிலும் தங்கள் இருதயங்களில் எரிந்து கொண்டிருக்கும் விண்ணப்பம் இருக்குமானால் தேவனுக்கு முன்பாக உங்கள் கரங்களையுயர்த்தி, ''கர்த்தராகிய இயேசுவே, எனக்குத் தேவையுள்ளது. என்னுடன் இன்றிரவு பேசும். என்னை சுகப்படுத்தும். என் பணத்தேவைகளை எனக்கு அருளும்'' என்று ஜெபியுங்கள் அல்லது வேறெதுவாய் இருந்தாலும். அவர் உங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாக்குவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபையோரில் தொன்னூறு சதவிகிதம் பேர். 19 எங்கள் பரலோகப் பிதாவே, உம்மை நாங்கள் அணுகுகிறோம். இப்பொழுது நாங்கள் வாசம் செய்து கொண்டிருக்கும் இக்களிமண் கூடாரத்தை, எங்கள் ஜீவனை சுமந்து மிதந்து கொண்டிருக்கும் இந்த சிறு படகைவிட்டு, விசுவாசத்தில் மார்ஸ், ஜூபிடர், வீனஸ் கிரகங்களையும், சந்திரனையும் நட்சத்திரங்களையும், இவைகளைக் கொண்டுள்ள விண்வெளியிலுள்ள 'மில்கி வே' (milky way) யைக்கடந்து, விசுவாசத்தில் பிதாவின் சிங்காசனத்துக்கு முன்பாக வந்திருக்கிறோம். அங்கு ஆணிகள் கடாவப்பட்ட கைகளையும் கால்களையுமுடைய நீர் உட்கார்ந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய சிங்காசனத்தை சுற்றிலுமுள்ள பொற்பீடத்தில் எங்கள் பலிகளை வைக்கும் போது, அந்த இரத்தம் எங்களுக்காக பரிந்து பேசுவதாக. எங்கள் விசுவாசத்தின் மூலம் நாங்கள் கேட்கப் போகும் எல்லாவற்றையும் கைகூடி வரப்பண்ணும் இயேசுவுக்காக உமக்கு முதலாவது நன்றி செலுத்துகிறோம். உயர்த்தப்பட்ட கரங்களை நீர் கண்டீர். அவைகளின் கீழுள்ள ஜனங்களின் இருதயங்களில் என்ன உள்ளதென்று அறிந்திருக்கிறார். கர்த்தாவே, என் விசுவாசத்தை பலியாக தேவனுடைய மகத்தான பொற்பீடத்தின் மேல் படைக்கிறேன். அங்கு நாள்தோறும் பலியானது சுகந்த வாசனையாக எரிக்கப்படுகின்றது. பிதாவே, இவர்களுடைய ஜெபங்களைக் கேட்டு இவர்களுக்கு உத்தரவு அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன். அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளை அவர்களுக்கு அருளிச் செய்யும். 20 இப்பொழுதும் கர்த்தாவே, தொடர்ச்சியாக நடை பெறவிருக்கும் மூன்று கூட்டங்களுக்காக நாங்கள் இன்றிரவு கூடி வந்திருக்கிறோம். உம்முடன் நெருங்கி நடக்க வேண்டுமெனும் நோக்கத்திற்கே அல்லாமல், வேறெந்த நோக்கத்துக்காகவும் நாங்கள் இன்றிரவு இவ்வுஷ்ணமான கட்டிடத்தில் கூடி வரவில்லை. என்ன செய்வதென்று... கர்த்தாவே, என்ன செய்வதென்று... தீர்க்கதரிசி சொன்னது போல், ''கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார். கர்த்தாவே, நாங்கள் கேட்ட பிறகு எப்படி காத்திருப்பதென்று எங்களுக்கு கற்றுத்தாரும். நீர் ஜெபத்தைக் கேட்டீர் என்றும், உம்முடைய சொந்த நேரத்தில் பரலோகத்தின் தாழ்வாரத்திலிருந்து பொற்படிகளின் வழியாக பதிலை எங்கள் ஆத்துமாக்களுக்குள் அனுப்புவீர் என்றும் நாங்கள் விசுவாசிப்பதனால் நாங்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக்கொள்வோம் என்று அறிந்து கொள்ளும்படியான விசுவாசத்தை தந்தருளுவீராக. நாங்கள் கேட்பதற்கு எங்கள் செவிகளையும், நாங்கள் ஏற்றுக் கொள்வதற்கு எங்கள் இருதயங்களையும் பரிசுத்தப்படுத்துவீராக. ஆராதனையின் முடிவில் நாங்களும் எம்மாவூர் சீஷரைப் போல், ''வழியிலே அவர் நம்முடனே பேசின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?“ என்று கூறுவோமாக. இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 21 இன்றிரவு ஏசாயாவின் புத்தகத்திலிருந்து ஒரு வேத பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். நாளை ஒரு தாளைக் கொண்டு வர நிச்சயமுடையவர்களாயிருங்கள்... நான் ஒரு படத்தை கரும்பலகையில் வரைந்து, பாடத்தை விளக்கப் போகிறேன். உங்களால் கூடுமானால் ஒரு தாளைக் கொண்டு வந்து வரைந்து கொள்வீர்களானால், நீங்கள் வீடு திரும்பின பிறகு அதை படிக்கலாம். 22 ஏசாயா 6-ம் அதிகாரத்திலிருந்து, இன்றிரவுக்கான பொருளுக்கென ஒரு சில வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன், அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன, அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து, ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். அப்பொழுது சேராபீயின்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன். ஏசா: 6:1-8 23 ஏசாயாவின் இந்த தரிசனத்தை நாம் படிக்கும் இந்நேரத்தில், அவன் எடுத்துக் கொண்ட பணியை எண்ணிப் பார்க்கும்போது அது மிகவும் பெரிய பொறுப்பு என்று தோன்றுகிறது. அது எனக்கு எப்பொழுதும் ஏசாயாவைப் பிடிக்கும். அவன் முக்கிய தீர்க்கதரிசிகளில் (major prophets) ஒருவன். அவன் முழு வேதாகமத்தையுமே எழுதிவிட்டான். வேதாகமத்தில் ஆக மொத்தம் அறுபத்தாறு புத்தகங்கள் உள்ளன, ஏசாயா அறுபத்தாறு அதிகாரங்கள் எழுதினான். அவன் சிருஷ்டிப்பின் ஆரம்பத்தைக் கொண்டு துவங்குகிறான். மத்தியில் புது ஏற்பாட்டையும் யோவான் ஸ்நானனையும் கொண்டு வருகிறான். 56-ம், 60-ம் அதிகாரங்களில் அவன் ஆயிரம் வருட அரசாட்சியுடன் முடிக்கிறான். ஆதியாகமத்திலிருந்து புதிய ஏற்பாடு, அதன் பிறகு வெளிப்படுத்தின விசேஷம். இந்த ஏசாயா மகத்தான மனிதன். முடிவில் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவன் இரத்த சாட்சியாய் மரித்தான். 24 வேதத்தில் காணப்படும் ஆவியினால் நிறைந்த ஒவ்வொரு மனிதனும் அவன் காலத்து அரசாங்கத்தினரால் கொலை செய்யப்பட்டான் அல்லது துன்புறுத்தப்பட்டான். உங்களால் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒவ்வொருவரும் மோசே, எபிரேய பிள்ளைகள், தானியேல், ஏசாயா முதலானோர். ஏசாயா வாளினால் துண்டு துண்டாக அறுப்புண்டான். வழிவழியாக யோவான் ஸ்நானன் வரைக்கும், அப்போஸ்தலர் ஒவ்வொருவரும், இயேசுவும் கூட. அவர்கள் எல்லோருக்கும் அவரவர் காலத்து அரசாங்கத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்பொழுது காரியங்கள் குவிக்கப்படும் விதத்தை நாம் காணும்போது, இந்நாட்களில் ஒன்றில், அவர்களுடைய சாட்சிகளுடன் கூட இன்னும் அநேக சாட்சிகள் சேர்க்கப்படும். பாருங்கள்? நாம் எப்பொழுதாவது ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய நேரம் இருக்குமானால் அது இப்பொழுதே. ரோமாபுரியில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நமக்கு அவர்களுக்கு அங்கு மகத்தான தருணம் உண்டாகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு எழுப்புதலைத் தொடங்கப் போகிறார்கள். அது நிச்சயமாக உலகம் முழுவதுமுள்ள எழுப்புதலாயிருக்கும். 25 நாம் மீண்டும் பாதிக்கப்படுதல் என்னும் பொருளுக்கு வருவோம் (மற்றதைக் குறித்து நாம் ஏழு முத்திரைகளின் போது பார்ப்போம்). உசியா ராஜா ஆடு மேய்க்கும் ஒரு பையனாயிருந்தான். அவன் வளர்க்கப்பட்டது. அவனுக்கு வெளி இடம் என்றால் பிரியம். அவன் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்த காலத்தில் அரசாண்டான். ஏசாயா வேறொரு முக்கிய தீர்க்கதரிசியிடம் பயின்றான். அது சகரியா என்று நினைக்கிறேன். ஏசாயா காட்சிக்கு வந்தபோது, சகரியா தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் மூலமாக ஏசாயா அறிவு பெற்றான். ஏசாயா அழைக்கப்பட்டு தீர்க்கதரிசியானான். தீர்க்கதரிசிகள் மனிதரால் ஏற்படுத்தப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் தீர்க்கதரிசிகளாகப் பிறந்தவர்கள். சபையில் தீர்க்கதரிசன வரம் ஒன்றுண்டு. ஜனங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள அநேக அங்கத்தினர்கள் ஆவியின் ஏவுதலால் இதை செய்ய முடிவும். ஆனால் தீர்க்கதரிசி என்பவனோ தீர்க்கதரிசியாகும் வரத்தை முன் குறித்தலின் மூலம் பெற்று அவன் தீர்க்கதரிசனம் உரைப்பவன் அல்ல தேவனால் சபையில் தீர்க்கதரிசியாக நியமிக்கப்படுகிறான். 26 இப்பொழுது, இப்பொழுது, அந்த இளைஞன் சிங்காசனத்தில் அமர்ந்தான் என்று நாம் காண்கிறோம். சில வேத வசனங்களை நீங்கள் குறித்தக் கொள்ள விரும்பினால், அது II நாளாகமம் 26-ம் அதிகாரம். அவனுடைய தகப்பனாகிய அமத்சியா மரித்த பிறகு - அவன் நீதிமானாயிருந்து அதன் பிறகு கர்த்தரைவிட்டு விலகி தன் சொந்த ஜனங்களால் கொல்லப்பட்டான் - அவனுடைய இடத்தில் உசிக்கியா - இல்லை, உசியா - ராஜாவாக அமர்ந்தான். அவனுக்கு பதினாறு வயதானபோது, அவன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டு, சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டான். அவன் அப்பொழுது ஒருபையன், ஆனால் நன்றாக ஆட்சி புரிந்தான். அவனுக்கு தேவனுக்கு பயந்த தகப்பனும் தாயும் இருந்ததாக வேதம் கூறுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவன் தேவனுக்கு பயந்த பையனாகவே வளர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் அவனுக்கு முன்னால் எப்பொழுதும் இருந்தது அது ஒன்றே. 27 நான் நினைப்பது என்ன தெரியுமா? ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து இருக்கக் கூடும். இந்த தேசம் பெற்ற மிகப் பெரிய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் என்பது என் கருத்து. அவர் ரிப்பப்பிளிக்கன் கட்சியை சேர்ந்தவர் என்பதனால் அல்ல, அவர் தேவ பக்தியுள்ள மனிதன் என்பதனால் அவர் தேவனைச் சேவிப்பதற்கென்றே வளர்க்கப்பட்டார். அவர், ''நான் யாருக்காவது புகழை செலுத்த விரும்பினால், அது என் தேவபக்தியுள்ள தாயாருக்கே. அவர்களுடைய வாழ்க்கை என்னில் பாதிப்பை உண்டு பண்ணினது. எனக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்து இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக அறிந்து கொள்ளும்படி செய்தவர்கள் அவர்களே“ என்றார். ஓ, நீங்கள் எப்படியிருக்கிறீர்களோ, அப்படித்தான் உங்கள் குடும்பமும் இருக்கும். உங்கள் பிள்ளையை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வளர்க்கிறீர்கள். அது தவறான வழியில் செல்வதற்கு உள்ள வாய்ப்பைக் காட்டிலும் சரியான வழியில் செல்ல தொண்ணூற்றெட்டு சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்''. உங்கள் பிள்ளைகளை சரியான வழியிலே வளர்த்து, அவர்கள் சரியானவைகளைச் செய்ய படித்துக் கொடுங்கள்: அவர்கள் பள்ளிக் கூடங்களில் உள்ள போதும் நேர்மையாகவும் உத்தமமாகவும் இருக்க. 28 அநேக சமயங்களில் பிள்ளைகளுக்கு பரீட்சையில் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகின்றது. இப்படியாக பள்ளிப்படிப்பை முடிக்க அவர்கள் பிரயாசப்படுகின்றனர். ஆனால் நீங்கள் சொந்தமாக பரீட்சை எழுதி அதை முடித்தால், நீங்கள் நல்ல மார்க்குகள் வாங்கினதைக் குறித்து மகிழ்ச்சியடையலாம். நாளைக்கு உங்களுக்கு பரீட்சை இருக்குமானால் இராத்திரி முழுவதும் படிக்காமல் அலைந்து, அடுத்த நாள் காலை எழுந்திருந்து, நான் இன்னார் இன்னார் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வேன். அவர்கள் கெட்டிக்காரர்கள். அவர்களை பார்த்து காப்பி அடித்திடுவேன் என்று கூறுவது நல்லதல்ல. காலை உணவு அருந்தும் போது அப்பா ஜெபம் செய்யும் நேரத்தில் நீங்கள் அவரிடம், “அப்பா, இன்று எனக்காக ஜெபியுங்கள். எனக்கு வேதியியல் பரீட்சை உள்ளது” என்று கூறிடுங்கள். அல்லது அது எதுவாயிருந்தாலும் சரி. அப்பொழுது அப்பாவாகிய நீங்கள் ஜெபம் செய்யும்போது, “தேவனே, இன்றைய பரீட்சையில் ஜான், மேரி இவர்களை ஆசீர்வதியும் என்கிறீர்கள்”. நான் சொல்லுகிறேன், அது போக்கையே மாற்றிவிடும். 29 ஞாபகம் கொள்ளுங்கள், நாம் விசுவாசத்தோடு கேட்போமானால், நாம் கேட்டதைப் பெற்றுக் கொள்வோம். இயேசு, விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். நீங்கள் கேட்காததினால் பெற்றுக் கொள்வதில்லை. நீங்கள் விசுவாசிக்காததனால் கேட்பதில்லை. கேளுங்கள், “அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்'' என்றார். அது எனக்குப் பிரியம். நமது சரியான போதனை: நீங்கள் சரியான காரியத்தை சொல்லுங்கள், சரியான காரியத்தை செய்யுங்கள், சரியான காரியத்தை சிந்தியுங்கள், எப்பொழுதுமே சரியானதை சிந்தியுங்கள். எனக்கு ஒரு சிறு சுலோகம் உண்டு: சரியானதை செய், அது நீ தேவனுக்கு செய்ய வேண்டிய கடமை. சரியானா விதமாக சிந்தி, அது உனக்கு உன் மேல் உள்ள கடமை. அப்பொழுது எல்லாம் உனக்கு சரியாக நடந்தே தீர வேண்டும். நீங்கள் ஒரே நேரத்தில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்ல முடியாது. அவ்வாறே நீங்கள் ஒரே நேரத்தில் சரியானதையும் தவறானதையும் செய்ய முடியாது. நீங்கள் எவ்வளவு தான் ஒரு திசையை நோக்கி செல்வதாக நினைத்தாலும், நீங்கள் மேற்கு நோக்கி செல்லாமல் போனால்... நீங்கள் மேற்கு நோக்கி சென்றால் கிழக்கு நோக்கி செல்லவில்லை. 30 எனவே இந்த இளம் ராஜா அவன் இளைஞனாயிருந்த போது அவனுடைய தகப்பனின் வாழ்க்கை அவனில் பாதிப்பை உண்டு பண்ணினது. அவன் தகப்பன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவனுடைய கற்பனைகளைப் போதித்தான்... ஆனால் திடீரென்று அவனுடைய கடைசி நாட்களில் அவன் போக்கு மாறிப்போய், அவன் தேவனுக்கு விரோதமாக போதித்தான். அவனுடைய சொந்த ஜனங்களே... அவன் தன் சொந்த ஜனங்களால் கொன்று போடப்பட்டான். அது உசியாவுக்கு ஒரு நல்ல பாடமாக இருந்திருக்கும். ஆகவே உசியா சிங்காசனத்துக்கு வந்த போது, அவன் தகப்பன் முன்பு நடந்த வழிகளில் நடந்து, தேவனுடைய காரியங்களை மீண்டும் புகுத்தி இஸ்ரவேல் ஜனங்களை மறுபடியும் தேவனுடைய வழிபாட்டில் கொண்டு வந்தான். அவன் தன்னை பெலப்படுத்திக் கொண்டான். உசியா தன் வாலிப நாட்களில் நடந்து கொண்ட விதத்துக்கு நான் எப்பொழுதும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவன் அரசியல் தந்திரங்களைக் கைக்கொள்ளவில்லை. அரசியல் அவனுக்கு விரோதமாக இருந்திருக்கக் கூடும். இருப்பினும் அவன் தேவனுடைய வழியில் நிலைத்திருந்தான். அது இந்த வாலிப தீர்க்கதரிசியாகிய ஏசாயாவை மெய்சிலிர்க்க வைத்து உசியாவை அவன் 'ஹீரோ' (hero)வாக பாவிக்கும்படி செய்தது. தீர்க்கதரிசியாகிய ஏசாயாவுக்கு அவன் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினான். 31 உசியாவுடன் வசிக்க ஏசாயா ராஜாவின் அரண்மனைக்குச் சென்றான். அவனுடன் தங்கும்படி ஏசாயாவை உசியா அழைத்தான். அவனுக்கு ஏசாயா பிரியமானவனாயிருந்தான். ஏசாயாவும் அப்பொழுது இளைஞன்... அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அந்த ராஜா எப்படி... அவன் அங்கு செல்லும்போது, அரசியலில் உள்ள யாராவது ஒருவர் அவனிடம் வந்து, ''நாம் இன்னின்னதை செய்ய வேண்டும்'' என்று சொன்னால், அவன் முதலில் தேவனைத் தேடி , “ஆண்டவரே, நாங்கள் இப்படி, இப்படி செய்வது உம்முடைய சித்தமா?'' என்று கேட்பான். தேவன் நமக்கு அப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதியைத் தந்தருளுவராக ஜனாதிபதி மாத்திரமல்ல, போதகர்களையும் கூட. ''முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்''. இது ஏசாயாவுக்கு பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கும். ஏனெனில் ஏசாயா அவனை அதிகமாக நேசித்தான். ஏனெனில் அவன் பெரியவன் என்றும், அவன் தேவனிடத்தில் ஊறுதியாக, திடமாக நின்றான் என்றும் ஏசாயா அறிந்து கொண்டான். நாம் வாழும் இக்காலத்தில், நாம் செய்யும் காரியங்களில், பொது ஜனங்கள் போதகர் செய்வதை மாத்திரம் காண்பதில்லை, சபையோர் செய்வதையும் காண்கின்றனர். 32 ஓ, நாம் சபையை நினைத்துப் பார்க்கும் போது, அது எவ்வளவு மோசமாயுள்ளது. ஒரு போதகர் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தை சேர்ந்திருந்து, இந்த ஸ்தாபனம் அவரை ஒரு குறிப்பிட்ட சபைக்கு அனுப்புமானால், போதகரின் கைகள் அந்த ஸ்தாபனத்தால் கட்டப்பட்டுள்ளன. அந்த இளம் போதகருக்கு தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமெனும் விருப்பம் உண்டு. ஆனால் ஸ்தாபனத்தில் சேர்ந்து கொண்டால் மாத்திரமே ஊழியம் செய்ய முடியுமென்று அவர் கற்பிக்கப்பட்டிருக்கிறார். அவர் எழுந்து நின்று வார்த்தை கூறுவதை பிரசங்கித்தால், சபை அவருக்கு விரோதமாக 'வோட்டு' போட்டு புறம்பாக்கிவிடும். அப்பொழுது சுவிசேஷத்தை பிரசங்கிக்க முடியாமல் போய்விடுமென்று அவர் பயப்படுகிறார். ஓ, இன்று பிரசங்க பீடங்களில் நமக்குத் தேவையானவர்கள் உசியா போன்றவர்களே. சபை அரசியல் அல்லது வேறு அரசியல் என்னவாயிருந்த போதிலும், அவன் தேவனுடைய கரத்தை அதில் ஈடுபடுத்தினான். ''கர்த்தர் உரைக்கிறதாவது“ என்னவென்பதை அறிந்து கொள்ளும் வரைக்கும் அவன் காத்திருந்து, அதன் பிறகு அதை செய்தான். வாலிப... அந்த வாலிப தீர்க்கதரிசி (அவனுக்கு ஏறக்குறைய உசியாவின் வயது). இருவரும் தேவாலயத்தில் ஒன்று கூடி ஜெபித்து, தேவனுடைய சித்தத்தை கேட்டறிந்து, அதை வேதத்திலுள்ள நியாயப்பிரமாணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அது தேவனுடைய சித்தத்தின்படி இருந்தால், உசியா அதை நிறைவேற்றினான். அப்படி அது சரியாக இல்லாவிட்டால், அவன் அரசியலைக் கடிந்து கொண்டான். அப்படிப்பட்ட அநேகரை தேவன் நமக்குத் தருவாராக! அது ஏசாயாவை மெய்சிலிர்க்க வைத்தது. ஏனெனில் அவன் தீர்க்கதரிசியாகப் பிறந்திருந்தான். உசியா ஏசாயாவுக்கு 'ஹீரோ'வாக ஆனான். பாருங்கள் அவன். அவன் தேவனுக்காக எடுத்துக் கொண்ட உறுதிபாட்டின் காரணமாக நீதிமான்களின் கண்களில் 'ஹீரோ'வாகத் திகழ்ந்தான். அக்காலத்தில் அநேக நீதிமான்கள் இருந்திருக்க மாட்டார்கள். பாருங்கள்? ஆனால் நாம் செய்ய வேண்டியது என்னவெனில், நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய கணக்கில் சரியாக அமைத்துக் கொள்வதே. மற்றவர்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். 33 அன்றொரு நாள் நான் ஒருவரைக் கடிந்து கொண்டேன். சுற்றுவட்டாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்... ஒரு பெரிய ஸ்தாபன சபை 'ராக் அண்டு ரோல்' நடனம் நடத்தினது. அவர்கள் காலை 1 மணி வரைக்கும் நடனமாடிக் கொண்டிருந்தனர். நமது கூடாரத்துக்கு வருகிற ஒருவரை அவர்கள் கேலி செய்து, நமக்கு ஸ்தாபனம் எதுவுமில்லை என்றும், இங்கு வருபவர்கள் உருளும் பரிசுத்தர்கள் என்றும் கூறினார்களாம். ஓ, அவர்களைக் கடிந்து கொள்ள எனக்கு ஒரு தருணம் கிடைத்தது. என்ன நடந்திருக்குமென்று யோசித்துப் பாருங்கள்... இப்பொழுது, இந்த ஜனங்கள்... இப்படி கேலி செய்த அந்த இளம் பெண், சத்தியம் என்னவென்று அறிந்திருப்பாளானால்... 34 சில வாரங்களுக்கு முன்பு நான் மலைக்குச் சென்றிருந்தேன். நான் வீடு திரும்பும்போது நாங்கள் (நானும் என் குடும்பமும்) சிறிது இளைப்பாற அங்கு சென்றிருந்தோம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த வாரம் மீண்டும் அங்கு செல்வோம். அங்கு ஒரு இரவு நான் தரிசனம் கண்டேன். அந்த தரிசனத்தில் ஒரு அழகான பெண் ஓடுவதைக் கண்டேன். அவள் கையை இங்கு வைத்திருந்தாள். அவள் விழுந்து மரித்துப் போனாள். கர்த்தருடைய தூதன் என்னிடம், ''இதை குறித்த நீ கேள்விப்படும்போது, அவள் தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் கூறுவார்கள். ஆனால்அவள் மாரடைப்பினால் இறந்தாள். இப்பொழுது ஏறக்குறைய 4.00 மணி. நீ 4.00 மணி என்று சொல் என்று சொல்லி, என்னை விட்டுப் போய்விட்டார். 35 அந்த மாட்டு முகாமில் தங்கியிருந்த என் குடும்பத்தை (மாடு மேய்ப்பவர் தங்குமிடம், அங்குதான் நாங்கள் புல் மேயும் மாடுகளை வளைத்து ஒட்டிக் கொண்டு வருவது வழக்கம்) நான் அப்பொழுது எழுப்பவில்லை. அவர்கள் காலை வரைக்கும் உறங்கும்படி விட்டு விட்டு, அன்று காலை அவர்களிடம், “ஒரு அழகான பெண், மிகக் கவர்ச்சியுள்ளவள் மாரடைப்பினால் இறந்துவிடுவாள்” என்றேன். இரண்டு நாட்கள் கழித்து நாங்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, வானொலியில், குமாரி (அவள் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை) மன்ரோ, திருமதி மன்ரோ. அது அவள் நடிப்புக்காக வைத்துக் கொண்ட பூனைப்பெயர் வேறெதோ ஒன்று. அவள் இறந்து போனாள். அவள் தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் கூறினர். 36 நான் எவ்வளவு கூறினாலும் உபயோகமிராது. அவர்கள் அப்பொழுதும் அவள் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் கூறுவார்கள். ஆனால் அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் மாரடைப்பினால் இறந்து போனாள். நீங்கள் கவனித்திருப்பீர்களானால், அவள் கை - தொலைபேசியின் அருகில் செல்ல முயன்றாள். தொலைபேசி அவள் கையிலிருந்தது. அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தூக்க மாத்திரைகள் அங்கிருந்ததாக அவர்கள் கூறினர். அவள் அந்த மாத்திரைகளை ஒரு மாத காலமாக (பாருங்கள்?) அல்லது அதற்கும் அதிகமாக, உட்கொண்டு வந்திருக்கிறாள். அவள் மாரடைப்பினால் இறந்து போனாள். 4 மணி அடிக்க நான்கு அல்லது ஐந்து வினாடிகளுக்கு முன்பு அவள் இறந்து போனாள். அவளுடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு பத்திரிகையில் படித்தேன். அவள் எப்படி... அவள் முறைதவறிப் பிறந்தவள். அவள் தன் ஜீவனத்துக்காக பாத்திரங்களைக் கழுவினாள். அவளுடைய தாய் பைத்தியக்காரர் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். அவள் ஆவல் கொண்டாள் (அவள் உலகிலேயே மிகச் சிறந்த உடலமைப்பை கொண்டிருந்தவள் என்று நினைக்கிறேன்) - பணத்தால் விலைக்கு வாங்கமுடியாத ஏதோ ஒன்றைப் பெற அவள் விழைந்தாள். “ஓ, அவளை நான் சந்தித்திருந்தால் நலமாயிருக்கும். அவளுடைய தேவை என்னவென்று எனக்குத் தெரியும்'' என்று எண்ணினேன். பார்த்தீர்களா! 37 ஒருக்கால் புகழ் பெற்ற, சிறந்த சபைகளின் அங்கத்தினர்கள், எல்லா பளிங்கும் பகட்டும் கொண்ட ஹாலிவுட் அவர்கள் அப்படிப்பட்டவர்களைக் கண்டுள்ளனர்... அவளைக் காட்டிலும் வித்தியாசமான வாழ்க்கை சபை அங்கத்தினர்கள் வாழவில்லை என்பதை அவள் கண்டாள். உங்கள் வாழ்க்கை மற்றவர்களில் பாதிப்பை உண்டாக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் வல்லமை ஜனங்களிடையே காணப்பட்ட, மற்றவர்கள் கிறிஸ்துவை தொங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு விக்கிரகமாக காணாமல், அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கின்ற ஜீவிக்கின்ற ஒன்றாக அவர், மனத் திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஓ, அந்த இளம் பெண் இவ்வுலகத்தை விட்டுப் போவதற்கு முன் நாம் மாத்திரம் அவளை சந்தித்திருந்தால், 38 இப்பொழுது, பாதிப்பு உசியாவின் வாழ்க்கை இந்த தீர்க்கதரிசியில் பாதிப்பு உண்டு பண்ணினது என்று நாம் காண்கிறோம். உகியா - இல்லை, உசியா, கோபுரங்களைக் கட்டி தன்னை பலப்படுத்திக் கொண்டு, பெலிஸ்தியர் கைவசமிருந்த இஸ்ரவேலருக்கு சொந்தமான நிலங்களையும் உடமைகளையும் கைப்பற்றினான். அவனுடைய புகழ் எகிப்து வரைக்கும் பரவினது. ராஜாக்களின் நாளாகமம் அனைத்திலும், சாலொமோனுக்கு அடுத்ததாக இவ்வாறு புகழெங்கும் பரவின ராஜா உசியாவைப்போல் வேறு யாருமில்லை என்று நான் சொல்லக் கூடும். ஏன்? அவன் எடுத்துக்காட்டாக விளங்கினான். அவன் தேவனுடன் நிலைத்திருந்தான். அவனுடைய ஜனங்கள் என்ன நினைத்தபோதிலும், மற்றவர் என்ன நினைத்தபோதிலும், தாங்கள் நினைத்ததை செய்ய அவனைத் தூண்டின அரசியல்வாதிகள் என்ன நினைத்த போதிலும் அவன் நேரடியாக தேவனுடன் நிலைத்திருந்தான். அது, தேவன் அவனை ஆசீர்வதித்தார். அது இந்த இளம் தீர்க்கதரிசிக்கு பேருதவியாக இருந்தது. 39 தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாயுள்ள ஒருவனை தேவன் எவ்வாறு ஆசீர்வதிக்கிறார். அப்படிப்பட்டவன் ஒருக்கால் அதிக பெயர் பெற்றவனாக இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் அவன் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவான். ஜனங்கள் இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் மற்றவர்களைப் போல் நடந்து கொள்ளப்போகிறீர்களா, அல்லது தேவனால் ஆசீர்வதிக்கப்பட விரும்புகிறீர்களா என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் மற்றவர்களைப் போல் வாழ்ந்தால், மற்றவர்களால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நீங்கள் தேவனிடம் திருப்பினால், நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, நீங்கள், தீர்க்கதரிசி கூறினது போல் நீங்கள் யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். முதலாவதாக எப்பொழுதும் உன் சிருஷ்டிகரை நினை. 40 இப்பொழுது, ஆனால் இந்த ராஜா மிகவும் பெரிய மனிதனாகி, அது ஏசாயாவிலும் தன் ராஜ்யத்திலிருந்த மற்ற நீதிமான்களிலும் ஒரு பாதிப்பை உண்டாக்கினபோது, அவன் சுய பாதுகாப்பாக இருப்பதாக எண்ணம் கொண்ட ஒரு நிலைக்கு அவன் சென்றான். இங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். இங்கே தான் அநேக நீதியான மனிதர். இழிவான நிலையை அடைந்துவிடுகின்றனர், தோல்வியை அடைந்துவிடுகின்றனர், ஏனென்றால் அவர்கள் சுயபாதுகாப்பான ஒரு உணர்வை பெற ஆரம்பிப்பதால் நீங்கள் நீண்ட காலம் கிறிஸ்துவுக்காக வாழ்ந்துவிட்டீர்கள் என்றும், அவர் உங்களுக்கு முன்பாக என்ன வைத்தாலும், உங்களுக்கு வேண்டுமானாலும், வேண்டாவிட்டாலும் அதை தெரிந்து கொள்ளலாம் என்னும் எண்ணம் உங்களுக்கு உண்டாகிறது. ஏனெனில் நீங்கள் தேவனுக்கு தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள் என்பது கவலையில்லை. இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதே. 41 ராஜா தனக்குள் யோசித்து, தன்னை மேட்டிமைபடுத்திக் கொள்ளும் ஒரு நிலையை அடைந்தான். பெருமை அவன் இருதயத்தில் குடி கொண்டது. அதுதான் நமக்கும் நேரிடுகிறது. என்னை மன்னித்துக் கொள்வீர்கள் என்றால், அது தான் தேசம் முழுவதும் உள்ள நமது சபைகளுக்கு நேர்ந்துள்ளது. அங்கு நல்லவர்கள் இருக்கின்றனர். உலகிலே மிகச் சிறந்தவர் சபைக்குச் செல்கின்றனர் என்று நினைக்கிறேன். ஆனால் காரியம் என்னவெனில், இந்த ஸ்தாபனங்கள் பெருமையின் காரணமாக தங்களை உயர்த்திக் கொள்கின்றன. அதுதான் மெதோடிஸ்டுகளுக்கு சம்பவித்தது. அதுதான் பாப்டிஸ்டுகளுக்கு சம்பவித்தது. அது தான் நசரீன்களுக்கும், யாத்திரீக பரிசுத்தருக்கும், பெந்தெகொஸ்தேயினருக்கும் சம்பவித்தது. அவர்கள் பெருமையினால் தங்களை உயர்த்திக் கொண்டு, சுயநலமுள்ளவர்களாய், பிடிவாதமுள்ளவர்களாய் உள்ள காரணத்தால், அவர்களிடம் நீங்கள் ஒன்றும் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் தாங்கள் எல்லாம் அறிந்தவர் என்னும் மனப்பான்மை கொண்டுள்ளதால் யாருமே அவர்களிடம் ஒன்றும் கூற முடியாது. அவர்கள் சகோதரருடன் கலந்தாலோசித்து, தங்களைச் சுற்றிலும் கோட்பாடுகளை உண்டாக்கிக் கொள்கின்றனர். அப்படி செய்யும் போது, அவர்கள் தேவனை பின்னால் தள்ளிவிடுகின்றனர். அதுதான் மருத்துவர்களுக்கு சம்பவிக்கின்றது. ஜனங்கள் தற்புகழ்ச்சி கொண்டவர்களாய் ஆகும்போது, அவர்களுக்கு தேவனிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று எண்ணுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் என்னுடன் தொடர்பு கொள்வது எனக்கு விருப்பமில்லை. நீங்கள் ஏதாவதொன்றிலிருந்து தேவனைத் தள்ளி விடுவீர்களானால், நீங்கள் என்னையும் தள்ளிவிடுவதையே நான் விரும்புவேன். பாருங்கள்? நீங்கள் எப்பொழுதுமே தேவனை முதலில் நினைவுகூர வேண்டும். அந்த ராஜா பெருமை கொண்டான். 42 இன்றைக்கு அநேகர். சபைக்கு செல்லும் ஒரு குடும்பத்தினரை எடுத்துக் கொள்ளுங்கள். தேவன் அந்த குடும்பத்தினரை சுகப்படுத்தி, ஆசீர்வதித்து, பரிசுத்த ஆவியைக் கொடுத்திருப்பார். சிறு பிள்ளைகள் உணவு மேசையில் ஜெபிப்பார்கள். அவர்கள் படுக்கைக்குப் போகும்முன்பு ஜெபிப்பார்கள். தகப்பனும் தாயும் கைகோர்த்து ஜெபம் செய்வார்கள். அவர்கள் இப்படி தொடர்ந்து செய்து கொண்டுவரும் வரைக்கும், அவர்கள் ஒரு குடும்பமாக நிலைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள்... தொடக்கத்தில் அவர்களுக்கு ஒன்றும் இருக்கவில்லை. ஒருக்கால் அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல ஒரு டப்பாகார் இருந்திருக்கக் கூடும். அல்லது அவர்கள் நடந்து சென்றிருப்பார்கள். முடிவில் அவர்கள் நல்ல கார் ஒன்றை வாங்குவார்கள், ஒரு நல்ல வீடும் கூட. முதலாவதாக என்ன தெரியுமா, உலகம் உயர்வகுப்பினர் என்றழைப்பவர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் இடம்மாறி வசிக்கின்றனர். அங்கே அவர்கள் தவறான பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் எப்பொழுதுமே தேவனுடைய ராஜ்யம் எங்குள்ளதோ, தேவனுடைய மகிமை எங்கு ஊற்றப்படுகிறதோ, அங்கு தங்கியிருக்க வேண்டும். ஆவிக்குரிய விதமாக நீங்கள் இரவும் பகலும் போஷிக்கப்படக் கூடிய இடத்தில் தங்கியிருங்கள். முதலாவதாக என்ன நடக்கிறது தெரியுமா? குடும்பத்தில் பிரிவினை உண்டாகின்றது. உலகப்பற்று அவர்களை ஆட்கொள்ளுகிறது. அவர்கள் மேட்டிமை கொள்கின்றனர். உசியாவும் அதைதான் செய்தான். அவன் மேட்டிமை கொண்டான். அவனுக்கு அதிக பெருமை வந்துவிட்டது. 43 அவன் என்ன செய்ய முயன்றான் என்று நாம் காண்கிறோம். அவன் இருதயத்தில் மேட்டிமை கொண்ட போது அவனைப் பீடித்தது என்னவெனில் (அதைக் குறித்து நமக்கு நாளாகமம் 26-ம் அதிகாரத்தில் - 2நாளாகமம் 26-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது) அவன் தூப கலசத்தை தன் கையில் பிடித்துக் கொண்டு, தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசித்தான் என்று நாம் காண்கிறோம். அவன் அவ்வாறு செய்த போது ஆலயத்தின் ஆசாரியரான எண்பது பேரும் அவன் பிறகே உட்பிரவேசித்து, “அப்படி செய்யாதேயும். அது தவறு. நீர் ஆசாரியன் அல்ல, நீர் ராஜா, ஆசாரியன் அல்ல'' என்றனர். அப்பொழுது உசியா கோபங்கொண்டான். அவன் கோபமாகப் பேசினான். அவன் அவர்கள் சொற்கேளாது தூப மூட்டினான். அவன் கோபத்துடன் தூப பீடத்தின் முன் நின்று கொண்டிருந்தபோது, தேவன் அவனை சரியாக அந்த இடத்திலேயே குஷ்டரோகத்தினால் அடித்தார். அவன் குஷ்டரோகியாய் மரணமடைந்தான். இவர்கள் அவனை தீவிரமாய் ஆலயத்திலிருந்து வெளியே கொண்டு போக வேண்டியதாயிற்று. 44 இதில் நமக்கு ஒரு பாடம் அடங்கியுள்ளது. இந்த மனிதன் மாத்திரம் தேவன் அவனை ஆசீர்வதித்த பதவியில்... அவன்அதில் திருப்தி கொள்ளவில்லை. அவன் வேறொருவனுடைய இடத்தை அபகரிக்க முயன்றான். நீங்கள் இல்லாத ஒன்றாக காங்கிரஸ்காரர் உப்ஷா கூறியது போல் (உங்களுக்கு அவரை ஞாபகமிருக்கும். அறுபத்தெட்டு ஆண்டுகளாக அவர் ஊனமுற்றிருந்தார். கர்த்தர் அவரை ஒரு கூட்டத்தில் சுகப்படுத்தினார். அவர் அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ்காரர்). அவர், ''நீங்கள் இல்லாத ஒன்றாக இருக்க முடியாது'' என்றார். அது முற்றிலும் உண்மை. தேவன் உங்களை அழைத்த அழைப்பில் நீங்கள் நிலைத்திருக்க வேண்டும். அவன் ராஜாவின் பதவியில் நிலைத்திருந்த வரைக்கும். ராஜா என்னும் முறையில் ஜனங்களுக்கு ஆசீர்வாதமாயிருந்தான். ஆனால் அவன் தன்னை ஆசாரியன் என்று எண்ணின் போது... தேவன் அவனை ஆசீர்வதித்த காரணத்தால், அவன் விரும்பும் எந்த பதவியையும் வகிக்கலாம் என்று எண்ணினான். ஆனால் அவன் ராஜாவின் பதவியில் மாத்திரமே ஜனங்களுக்கு ஆசீர்வாதமாயிருந்தானேயன்றி ஆசாரியத் தொழிலில் அல்ல... அவன் ஆசாரியனின் ஸ்தானத்தை அபகரிக்க முயற்சித்த போது, ஜனங்களுக்கு சாபமானான். அப்படி அநேகர் நம்மிடையே உள்ளனர். எல்லோருமே பந்தை உதைக்க விரும்புகின்றனர். பாருங்கள்? 45 நீங்கள் கால் பந்து விளையாடும் போது (இது கால்பந்து விளையாடும் காலம்) நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்றால், ஒருவன் பந்தை உதைத்து சென்று கொண்டிருக்கும் போது, எல்லாருமே அவனிடமிருந்து பந்தை பிடுங்கி உதைத்து செல்ல முயற்சி செய்யக்கூடாது. அவனை பாதுகாக்க முயல வேண்டும். அவனை பந்து உதைக்க விட்டு அவனைச் சுற்றி காவல் இருக்கவேண்டும். ஏனெனில் நாம் 'கோல்' (goal) போட வேண்டியது அவசியம். பாருங்கள்? ஆனால் தங்கள் கட்சியிலுள்ள மனிதன் 'கோலை' நோக்கி பந்து உதைத்து சென்று கொண்டிருக்கும் போது, எதிர் கட்சியிலுள்ள விளையாட்டுக்காரர்கள் அவனை நெருங்கவிடாமல் பாதுகாத்து, அவன் பந்தை உதைத்துக் கொண்டு செல்ல விடுவதற்கு பதிலாக, அவனிடமிருந்து அதே கட்சியை சேர்ந்த விளையாட்டுக்காரர் ஒவ்வொருவரும் அந்த பந்தைபிடுங்கி அதை உதைத்துக் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு பயிற்சி பெறாதவர்களாயிருப்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அப்படியானால் நாம் நிச்சயம் தோல்வியடைவோம். இன்றைக்கு நம்மிடையே அதுதான் காணப்படுகிறது. தேவன் காட்சியில் வந்து, குறிப்பிட்ட ஒன்றை ஆசீர்வதிக்கும்போது, சத்துருக்கள் அதை நெருங்க விடாதிருப்போமாக. நாம் கால்பந்தாட்டத்தில் ஓடுபவர்களாயிராமல் (runners) நமது செல்வாக்கை பயன்படுத்தி ஒடுபவனை நெருங்கவிடாமல் காக்கும் சமாளிப்பவர்களாய் (tackles) இருப்போமாக. பந்தை மற்றவன் உதைத்துக் கொண்டு செல்லட்டும். ஏனெனில் அவனுக்கு எதிர்ப்பு இருக்காது. நீங்கள் செய்ய வேண்டியது ஓடிக்கொண்டிருப்பதே. நாம் சமாளிப்பவர்கள். 46 நான் உலகெங்கும் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். முழு சுவிசேஷ வர்த்தகர் உலகெங்கிலும் தங்கள் குழுக்களை நிறுவியுள்ளனர். அண்மையில் ஜமய்க்காவிலுள்ள கிங்ஸ்டனில் நடைபெற்ற கூட்டத்துக்கு காஸ்ட்ரோவும் மற்றவர்களும் வந்திருந்தனர். (நாங்கள் அவரிருந்த இடத்துக்கு சென்றிருந்தோம்). தீவிலிருந்த பெருமக்கள் அனைவரும் வந்திருந்தனர். அந்த வர்த்தகர் சுவிசேஷத்தை பிரசங்கித்த போது, காஸ்ட்ரோவுக்கு அமைதியற்ற உணர்வு ஏற்பட்டது. பிரசங்கிமார்களாகிய நாங்கள் அந்த நிலையை மாற்ற கடினமாக முயன்றோம். அவர்கள் தங்களுக்குள்ள சிறு செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு தெரிந்த முறைகள் அனைத்தும் இப்படியும் அப்படியுமாக உபயோகப்படுத்தி, முடிவில் அதை குழப்பிவிடுகின்றனர். உங்களுக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. 47 அநேக சமயங்களில்... ஒருசிறு சபையில் எழுப்புதல் நடந்து கொண்டிருக்கும். யாராவது ஒருவர் அங்கு சென்று ஜெபக் கூட்டத்தை நடத்த பிரியப்படுவார். அவருக்கோ வேதம் என்ன கூறுகிறதோ, அதைவிட வித்தியாசமான கருத்து இருக்கும். அந்த விதமாக அவர் அதை விசுவாசிக்கிறவராக இருப்பார். அவர்தன் செல்வாக்கை பயன்படுத்தி, மற்றவர்களை உண்மையான சத்தியத்திலிருந்து விலகச் செய்வதற்கு வழியுண்டு. நாம் செய்ய வேண்டியது என்னவெனில், நாம் 'கோல்' போட வேண்டுமானால், செய்தி இப்பொழுது சென்று கொண்டிருக்கும் விதத்தில் அதை பாதுகாத்து, அதில் நிலைத்திருந்து, அதை எதுவும் நெருங்கவிடாமல் அதை விட்டு அகற்றிவிடுவத. 48 நான் வர்த்தகரிடம், “சகோதரரே, ஏதோ தவறுள்ளது. நீங்கள் வர்த்தகர். முதலாவதாக, உங்களுக்கு அணுகும் முறை தெரியவில்லை. இந்த ஊழியத்தை எப்படி அணுகுவது என்பது உங்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் ஊழியம் என்பது தேவனால் அழைக்கப்பட்டு அளிக்கப்பட்ட வரம்'' என்றேன். “தேவன் சபையில் முதலாவதாக அப்போஸ்தர்களையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும், சுவிஷேகரையும், மேய்ப்பர்களையும்”, ஏற்படுத்தினார். சபையானது பக்திவிருத்தி அடைவதற்காக அவர்களை ஏற்படுத்தினார். வர்த்தகர் சாட்சி கூற வேண்டும். ஸ்திரீகள், வீட்டு பெண்மணிகள் - நீங்கள் வேறொருவர் வீட்டில் வேலைக்காரியாயிருந்தாலும் - சாட்சி கூறுங்கள். தேவனுடைய ராஜ்யத்துக்கென்று உங்களாலான எல்லாவற்றையும் செய்யுங்கள். ஆனால் உங்கள் சொந்த கருத்துக்களை உள்ளே புகுத்தாதீர்கள். செய்தி கூறுவதை மாத்திரமே கூறி அப்படியே சென்று கொண்டிருங்கள் (பாருங்கள்?). அப்பொழுது ஒருக்கால் உங்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். தேவன் உங்களை அழைத்திருந்தாலொழிய பிரசங்கம் செய்யாதீர்கள். நீங்கள் சாட்சி கூறுவதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் தவறான பதவிக்கு சென்று எல்லாவற்றையும் குழப்பிவிடுவீர்கள். அவ்வளவுதான். அது தேவனை ஒருக்காலும் பீரீதிபடுத்தாது. உசியாவின் சம்பவம் அதை நிரூபிக்கிறது. 49 இந்த ராஜா... அவன் கடிந்து கொள்ளப்பட்டு, தேவாலயத்திலிருந்த ஆசாரியன் அவனிடம் உண்மையை எடுத்துக் கூறி, அவன் செய்வது தவறென்றும், தேவன் ஆரோனின் சந்ததியாரை மாத்திரமே இதற்கென்று அழைத்திருக்கிறார் என்றும், அவர்கள் மாத்திரமே அந்த ஊழியத்திற்கென பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவனிடம் கூற முற்பட்டபோது... அவர்கள் அதை மாத்திரமே செய்ய வேண்டியவர்களாயிருந்தனர். அவர்கள் அதற்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தனர். ஒரு ராஜா எவ்வளவுதான் நீதிமானாயிருந்த போதிலும், அல்லது தேவன் அவனை எவ்வளவாக ஆசீர்வதித்தாலும், அவனுக்கு தூபங்காட்ட உரிமை இல்லவே இல்லை. அவன் அப்படி செய்யும் போது, ஆசாரியனின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறான். அவன் அப்படி செய்யவே கூடாது. அவன் கடிந்து கொள்ளப்பட்டபோது, அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவனுக்கு கோபம் மூண்ட அந்த நேரத்தில், அவனுடைய முகத்தில் குஷ்டரோகம் தோன்றினது. அவன் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்ட போது, தூபகலசத்தை போட்டு விட்டு ஆலயத்தை விட்டு வெளியே ஓடினான். பாருங்கள்? வேறொருவரை பாவனை செய்ய முயலுதல். அப்படி நாம் செய்யவே கூடாது. அவனுடைய கோபத்தில் அவன் தவறு செய்தான். அதன் விளைவாக அவன் அடிக்கப்பட்டான். ஓ, இந்த இளம் தீர்க்கதரிசி ஏசாயாவுக்கு அது நிச்சயம் ஒரு பாடமாக அமைந்திருந்தது. அதாவது ஒருவன் எவ்வளவு பெரியவனாயிருந்த போதிலும், அவன் தன்னுடைய அழைப்பிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது. 50 இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறதென்றும், இது உலகமெங்கும் காடுகளில், ஆப்பிரிக்க பழங்குடியினரிடையே, இன்னும் மற்ற இடங்களுக்கு செல்லுகிறதென்றும் நானறிவேன். இன்றிரவு அளிக்கப்படும் இச்செய்தி மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும். ஆனால் இதை என் முழு இருதயத்தோடும் கூறுகிறேன். எப்படி... அநேகர் என்னிடம், “நீங்கள் ஏன் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்ளக் கூடாது? நீங்கள் ஏன் பெந்தெகொஸ்தேகாரரிடம் இணைந்து கொள்ளக்கூடாது? இந்த சிறு காரியங்களை நீங்கள் ஏன் எடுத்துக் கூறாமல் விட்டுவிடக் கூடாது? என்கின்றனர். என்னால் எப்படி செய்ய முடியும்”? நான் செய்தியில் நிலைத்திருக்க வேண்டுமே! கர்த்தருடைய தூதன் நதியில், நீங்கள் காணும் அந்த ஒளியில், தோன்றின் போது அது அரசாங்கத்தாலும் விஞ்ஞான ஆய்வினாலும் உண்மையென்று நிரூபிக்கப்பட்டது. நான் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டுமென்று என்னிடம் கூறினார். அப்படியானால் நான் வார்த்தைக்கு பதிலாக ஒரு கோட்பாட்டை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவர்கள் அவ்வாறு செய்யத் துணிந்தால் செய்யட்டும். ஆனால் நாமோ வார்த்தையை பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒப்புரவாகாதிருங்கள். வார்த்தையில் நில்லுங்கள். 51 ஒப்புரவாகி வேறொன்றைச் செய்வதோ அல்லது மேட்டிமையடைந்து நமக்குள், ''ஓ, என்னால் இதை செய்து அதிக பணம் சம்பாதிக்க முடியும். நான் இதை செய்வேன். சகோதரர் அனைவரும் என்னுடன் இணங்குவார்கள் என்று கூறுவது ஆபத்தான செயல் என்பதைக் கண்டு கொண்டீர்களா? நான் மாத்திரம் வார்த்தையின் விஷயத்தில் - அவர்களுடன் ஒப்புரவாகிவிட்டால், போதகர்களில் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் என்னிடம் வந்து“, ”ஓ, அது மிகவும் அருமையானது. அது மிகவும் நல்லது“ என்பார்கள். அநேகர் என்னை இப்பொழுது அழைக்கும் காரணம்... அது என்ன? அப்பங்களுக்கும் மீன்களுக்காகவும். அநேகர் சுகம் பெறுவதையும், சிந்தனைகளைப் பகுத்தறிதல் போன்ற தேவனுடைய வல்லமை வெளிப்படுவதையும் அவர்கள் காணும் போது, ஜனங்களை தங்கள் சபைகளுக்கு இழுக்க வேண்டுமெனும் எண்ணம் கொண்டு என்னை அவர்கள் அழைக்கின்றனர். ஆனால் வார்த்தையுடன் இணங்கும் விஷயத்தில் அவர்கள் அதிலிருந்து விலகிச் செல்கின்றனர். பாருங்கள்? நீங்கள் அப்படி செய்யக்கூடாது. வார்த்தையில் நிலைத்திருங்கள்! 52 இது அந்த இளம் தீர்க்கதரிசிக்கு ஒரு பாடமாக அமைந்திருந்தது அதாவது என்னவானாலும் அவன் தன் அழைப்பில் நிலைத்திருக்க வேண்டும் என்பது. ஓ என்னே, தேவன் மனிதனுக்கு அளித்த கட்டளையை அவன் கற்றுக் கொண்டான். தேவன் மனிதனுக்கு அளித்த கட்டளை என்னவெனில், அவன் தன்னுடைய ஸ்தானத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. தேவன் ஸ்திரீகளுக்கும் அவர்கள் தங்கள் ஸ்தானத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். ஸ்திரீகளாகிய நீங்கள் மனிதரின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் அதை செய்ய முயன்று வருகிறீர்கள், அப்படி செய்யாதீர்கள். மனிதர்களே, ஸ்திரீகளின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஸ்திரீகளின் உடைகளைத் தரிக்காதீர்கள். ஸ்தீரீகளே, ஆண்களின் உடைகளைத் தரிக்காதீர்கள். அப்படி செய்வது தவறென்று வேதம் உரைக்கிறது. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது. அது தேவனுக்கு அருவருப்பானது என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? இப்பொழுது நீங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. பாருங்கள்? நீங்கள் அதற்கு விரோதமாக அறைகூவாமல், வேறென்ன செய்ய முடியும்? நீங்கள் அப்படி செய்யும் போது... 53 இந்தியானா நீதிமன்றத்தின் தீர்ப்பை நீங்கள் கண்டீர்களா? என்ன ஒரு அவமானம் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, போர்ட் ஃபுல்டனிலுள்ள ஒரு குடும்பம் (அந்த குடும்பத்திலுள்ள சிலர் இன்றிரவு இங்கிருக்கின்றனர் என்று நினைக்கிறேன்). அந்த குடும்பத்திலுள்ள ஒரு பெண் குட்டை கால் சட்டை அணிந்து பள்ளிக்கு சென்றதால் அவளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனால் இந்த வாரத்தில், ஒரு பெண் குட்டைகால் சட்டை அணிந்து பள்ளிக்கு செல்ல மறுத்ததன் காரணமாக நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடுத்து அவளை பள்ளி நீக்கம் செய்துவிட்டனர். நமது நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது? இது சுயாதீனமுள்ள நாடு என்றும், மார்க்க விஷயத்தில் நமக்கு உரிமையுண்டு என்றும் நான் எண்ணியிருந்தேன். இந்த பெண்ணின் தகப்பனார் நீதிமன்றத்தில், ''எங்கள் பெண் பிள்ளைகள் பதினாறு, பதினேழு வயதானவர்கள் குட்டை கால் சட்டை அணிவது நாங்கள் கொண்டுள்ள மார்க்க விசுவாசத்துக்கு விரோதமான செயல் என்று கூறினார். அவர்களோ அதை ஏற்றுக் கொள்ளாமல் பெண்ணை பள்ளி நீக்கம் செய்துவிட்டனர். 54 சபைகளின் சங்கத்தில் எல்லா சபைகளையும் அவர்கள் இணைக்க முயன்று, இந்த ஐக்கியத்திற்கென அவர்கள் ஏற்படுத்தியுள்ள சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு அதில் சேர மறுக்கும் அனைவருக்கும் அவர்கள் ஒரு பிரத்தியேக மாகாணத்தை உண்டாக்கியுள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்டவர்களை அவர்கள் அலாஸ்காவுக்கு அனுப்பப் போகிறார்களாம். அந்த குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு நீங்கள் இப்பொழுதே தாயராகுங்கள். ஏனெனில் அது வரும் போல் தோன்றுகிறது. என்ன ஒரு அவமானம்! 55 என் வாழ்நாள் முழுவதும் எனக்கு நண்பராயிருந்து வந்துள்ள ஜிம் பூல். அவருடைய மகன் இன்றிரவு வந்திருக்கிறான். அவனுடைய தகப்பனார் இங்கு வந்து அவருடைய மகன் என்ன செய்கிறான் என்று கூறியிருந்தால் நலமாயிருக்கும். இன்று நாங்கள் தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவர் செய்தி விரிவுரையாளரோ அல்லது வேறு யாரோ ஒருவர் (அது யாரென்று இப்பொழுது எனக்கு ஞாபகமில்லை) கூறினதை என்னிடம் எடுத்துக் கூறினார். அவர், ''முன்பெல்லாம் அமெரிக்க மக்கள் வாரத்துக்கு ஒரு முறை குளித்து தினந்தோறும் ஜெபம் பண்ணுவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ அவர்கள் தினந்தோறும் குளித்து வாரத்துக்கு ஒரு முறை மாத்திரமே ஜெபம் பண்ணுகின்றனர்'' என்றாராம். நான் குளிக்காமல் கூட இருந்துவிடுவேன். நாம் எவ்வளவாக விழுந்துவிட்டோம் என்பதை அது காண்பிக்கிறது. நமது நாட்டுக்கு என்ன நேர்ந்துவிட்டது? 56 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒஹையோவில் கூட்டத்துக்கு சென்றிருந்தேன். கூட்டம் நடந்த அந்த இடத்தின் பெயரென்ன? (யாரோ ஒருவர் சட்டக்வா என்கிறார் - ஆசி) சட்டக்வா. நான் தங்கியிருந்த விடுதியில் வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது, ''சுதந்திரம் என்னும் மலர் இன்று பிற்பகல் ஓஹையோ நீதிமன்றத்தில் மடிந்துவிட்டது என்று கூறப்பட்டது. ஆமிஷ் வகுப்பினருக்கு தங்கள் பிள்ளைகளை பொதுமக்கள் பள்ளிக்கு அனுப்ப பிரியமில்லை. அவர்களுக்கு தங்கள் சொந்த பள்ளிகள் உண்டு. இவர்கள் வாழ்ந்து வரும் இந்த குறிப்பிட்ட வட்டாரத்தில் அவர்களுடைய உயர்நிலைப்பள்ளி எதுவும் கிடையாது. ஆனால் ஓஹையோ சட்டப்படியும், இந்தியானா சட்டப்படியும் (அது தேசிய சட்டம் என்று நினைக்கிறேன்). எல்லா பிள்ளைகளும் பதினாறு வயது அடையும் வரைக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆமிஷ் வகுப்பைச் சேர்ந்த இந்த மனிதனுக்கு பதினாறு வயது அடையாத ஒரு பையனும் ஒரு பெண்ணும் உள்ளனர். டார்வீன் தத்துவத்தை கற்றுக் கொடுக்கும் பொதுமக்கள் பள்ளிக்கு அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்ப மறுத்தனர் (அதாவது மனிதன் ஒரே அணுவிலிருந்து தோன்றினவன் என்றும், அவன் குரங்கிலிருந்து தோன்றினான் என்றும், அவன் குரங்கிலிருந்து உயரினத்தை அடைந்தவனேயன்றி வேறு யாருமல்லவென்றும் அந்த தத்துவம் போதிக்கிறது). பெற்றோர் இந்த தத்துவத்தை நம்பாததனால் இந்த பிள்ளைகள் அதை பள்ளிகளில் கேட்க அவர்கள் விருப்பப்படவில்லை. எனவே நீதிமன்றம் அவர்களை விசாரணை செய்தது. பெண்கள் கத்தரிப்பது போல் தலைமயிரைக் கத்தரித்து, கோட் அணிந்திருந்த அந்த அறிவு நிறைந்த இந்த நீதிபதி, வயது சென்ற தகப்பனையும் தாயையும் நோக்கி, “ஐயா, ஓஹையோ நாட்டு சட்டப்படி, பிள்ளைக்கு பதினாறு வயதாகும் வரைக்கும் பள்ளிக்கு செல்லவேண்டும். நீங்களோ உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறீர்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?” என்று கேட்டார். 57 அதற்கு தகப்பன், ''மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே, நான் பிறந்த இந்த அழகான நாட்டின் சட்டத்தை மதிக்கிறேன். அநேக ஆண்டுகளுக்கு முன்பு மார்க்க சுயாதீனத்தை தேடி என் முன்னோர்கள் இங்கு வந்தனர். அந்த மார்க்க சுயாதீனத்துக்காகவே நாங்கள் இங்கிருக்கிறோம். நாங்கள் மிருகங்களிலிருந்து உண்டானவர் அல்ல என்று எங்கள் மார்க்கம் போதிக்கிறது... நாங்கள் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டோம் என்று விசுவாசிக்கிறோம். எனவே மிருகங்களிலிருந்து மனிதன் உண்டானான் என்று கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கு எங்கள் பிள்ளைகளை அனுப்புவது நாங்கள் கொண்டுள்ள மார்க்க விசுவாசத்துக்கு விரோதமான செயல். எங்கள் பிள்ளைகள் செல்ல எங்கள் சொந்த பள்ளிகள் இங்கில்லை. உங்களை நாங்கள் மதிக்கவில்லை என்று கருத வேண்டாம். நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அதை விசுவாசிப்பதில்லை. அது எங்கள் பிள்ளைகளுக்கு கற்று தரப்படுவதை நாங்கள் விரும்பவில்லை'' என்றார். நீதிபதி, “உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் நீங்களும் உங்கள் மனைவியும் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் செய்ய வேண்டும். உங்கள் தீர்மானம் என்ன?'' என்றார். அவர், “நானும் மனைவியும் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கிறோம்”, என்று சொல்லிவிட்டு திரும்பி வெளியே நடக்கத் தொடங்கினர். நீதிபதி சிறிது குத்தப்பட்டவராக, “இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துங்கள் என்று வேதம் கூறுவது நினைவிருக்கிறதா?” என்று கேட்டார். தகப்பன் அவரைத் திரும்பிப் பார்த்து, ''தேவனுடையதை...'' என்றார். நீதிபதி, ''உங்களுக்கு இரண்டு ஆண்டு காவல் தண்டனை விதிக்கிறேன்“ என்றார். செய்தி படிப்பவர், “சுதந்திரம் என்னும் மலர் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் மடிந்துவிட்டது” என்றார். 58 டங்கர்ட் இல்லை, ஆமிஷ் வகுப்பினர் எவ்வளவு விசித்திரமானவராயிருந்த போதிலும், பரிசுத்த வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களிடையே சிறுவர்களின் சீர்கேடு (Juvenile delinquency) இருப்பதாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் எங்கும் சான்றுகள் இல்லை. அவர்களுடைய பிள்ளைகள் ஒருவரும் கூட அந்த சீர்கேடான நிலையை அடையவில்லை. அவர்கள் ஒருக்கால் விசித்திரமானவர்களாய் இருக்கலாம். ஆனால் அவர்கள் சரியான வழியில் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களை நான் குறை கூற மாட்டேன். கவனியுங்கள், மலர் அந்த நேரத்தில் மடிந்தது, ஆனால் பத்து நிமிடங்களுக்குள் மறுபடியும் உயிர் பெற்றது. நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக வேலை பார்க்கும் அனைவரும் தங்கள் வழக்கு புத்தகங்களை தள்ளி வைத்து விட்டு, ''நாங்கள் ராஜினாமா செய்துவிடுகிறோம். இந்த அரசியல் சட்ட உரிமை முறிக்கப்படுமானால், மற்றவைகளும் ஒவ்வொன்றாக முறிக்கப்படும்'' என்றனர். 59 அன்று ஞானமுள்ள மெதோடிஸ்டு பேராயர் பள்ளிகளில் ஜெபம் செய்வதைக் குறித்து தெரிவித்த தன் அபிப்பிராயத்தை கவனித்தீர்களா? மெதோடிஸ்டு சபை அப்படி செய்யவில்லை. அதை அறிந்து கொள்ள பேராயர் போதிய ஞானம் படைத்தவராயிருந்தார். வேறொரு ஸ்தாபனம், தங்கள் ஜெபத்தை எவ்வளவாக பள்ளிகளில் திணிக்க முடியும் என்று முயன்று வந்தது. அவர்கள் அதை நிறைவேற்றினால், மற்ற ஸ்தாபனத்தின் ஜெபத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாக நிறைவேற்ற வேண்டும். அவர்கள் எந்த வாய்க்காலின் வழியாக நுழைத்துவிடலாம் என்று ஆராய்ந்து கொண்டே வருகின்றனர். கவலைப்படாதீர்கள், அவர்கள் எப்படியும் நுழைத்துவிடுவார்கள். 60 ஓ! நமக்கு சிலுவை வேண்டும். நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காலத்தில் கிறிஸ்து நமக்கு வேண்டும். ஒரு பானை கூழ் உங்களுக்கு அனுப்பக் கூடும் மனிதனால் நீங்கள் வசீகரிக்கப்பட வேண்டாம். அல்லது நீங்கள் ஓட்டிச் செல்ல ஒரு நல்ல காரை, அல்லது நீங்கள் தங்குவதற்கு நல்ல ஒரு வீட்டை உங்களுக்குத் தரும், ஒரு மனிதனால் நீங்கள் வசீகரிக்கப்பட்டு கிறிஸ்துவுக்காக நீங்கள் கொண்டுள்ள உங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போடாதீர்கள். அப்படி செய்யாதீர்கள் நீங்கள் செய்வதைக் குறித்து கவனமாயிருங்கள். தேவனால் வசீகரிக்கப்பட்டு, அவரால் ஆதரிக்கபட்டு, தேவன் அவரோடு கூட இருக்கிறார் என்று நீங்கள் அறிந்துள்ள ஒருவரையே பின்பற்றுங்கள். நீங்கள் தவறான காரியங்களினால் பாதிக்கப்பட்டு அதை பின்பற்றாதிருங்கள். ஆம். சரி. வேறொரு இடத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். 61 தேவாலயத்தில் கண்ட தரிசனம். தேவன் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருப்பதை ஏசாயா கண்டான். பாருங்கள், இந்த ராஜா... அவன் ஏசாயாவுக்கு முன்மாதிரியாக இருந்தான். இந்த ராஜா தான் அழைப்பை விட்டு வெளியேறினவுடனே தேவன் அவனை குஷ்டரோகத்தினால் அடித்ததை ஏசாயா கண்டான். ஏசாயா, ''நான் என்ன செய்வேன்?“ என்று பதறினான். உசியா மரணமடைந்தான். ஏசாயா அவன் மீது அதிகமாக சார்ந்திருந்தான், அத்துடன் தனக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்றும், அவன் என்ன செய்வான் என்றும் எண்ணினான். அவன் வாழ்க்கையே ஏறக்குறைய முடிந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றினது. எனவே அந்த இளம் தீர்க்கதரிசி என்ன செய்தான்? ஜெபிப்பதற்காக அவன் தேவாலயத்துக்கு புறப்பட்டுச் சென்றான். அவன் பலிபீடத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கதறினான். சில சமயங்களில் தேவன் நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் ஆதாரங்களை நம்மை விட்டு எடுத்துப் போடுகிறார். நமக்கு வியாதி வர அவர் அனுமதிக்கிறார். நமக்கு ஏமாற்றங்கள், மனமுடையும் செயல்கள் போன்றவை வர அனுமதிக்கிறார். நீங்கள் சுவிசேஷத்தின் பக்கம் இழுக்கப்பட வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் அப்படி செய்கிறார். அதை புரிந்து கொள்ள போதிய ஞானமுள்ளவர்களாயிருங்கள். மூடத்தனமாய் அதை விட்டு நடந்து சென்றுவிடாதீர்கள். 62 கவனியுங்கள், ஏசாயா வித்தியாசமான ஒன்றைக் காண வேண்டுமென்று அறிந்து இருந்தான். அவன் என்ன செய்தான்? அவன் தேவாலயத்துக்கு சென்று, தன் கரங்களை உயர்த்தி, தேவனிடம் கதறினான். அப்பொழுது அவனுக்கு தரிசனம் உண்டானது. அவன் தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கண்டான் இங்கே கீழே சிங்காசனத்தில் அல்ல, ஆனால் உயரே உன்னதமான சிங்காசனத்தில், ஓ, என்னே! அவருடைய வஸ்திரத் தொங்கல் கிழேயிருந்து பரலோகம் வரைக்கும் உயர்ந்திருந்தது. சேராபீன்கள் இங்கும் அங்கும் பறந்து கொண்டிருப்பதை ஏசாயா தேவாலயத்தில் கண்டான். ஓ,என்னே!, ''சேராபீன்கள்“, என்றால் ”தீ மூட்டுபவர்கள்“ என்று பொருள். அவர்கள் பலிபீடத்தின் அருகேயுள்ளனர். உண்மையில் சேராபீன்கள் பலியை வாங்கிக் கொண்டு ஆராதிப்பவனை சுத்தரிகரித்து, அவனை தேவனுக்கு முன்பாக நிறுத்துகிறவர்கள். சேராபீன்கள் அப்படி செய்கிறவர்கள். சேராபீன்கள் தேவதூதர்கள். அவர்கள் பலியை வாங்குகிறவர்கள். பாவத்துக்காக பலி செலுத்தப்படாமல் அவருடைய பிரசன்னத்தில் வரமுடியாது என்னும் தேவனுடைய நீதியை இது காண்பிக்கிறதாயுள்ளது. பாருங்கள்? அந்த சேராபீன்கள்... ஏழு சபையின் காலங்களைக் குறித்து நாம் பார்த்த போது, அவர்கள் எப்படி சுவிசேஷங்களை எல்லா பக்கங்களிலுமிருந்தும் காவல் காத்தனர் என்று கூறினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அதை சுடரொளி பட்டயத்துடன் ஏதேன் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தூதர்கள் வரைக்கும் நாம் கொண்டு சென்று பார்த்தோம். சேராபீன்கள் பலிபீடத்தை காவல் காக்கின்றனர். 63 அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஏசாயா ஆவிக்குள்ளான போது, உயரே பரலோகத்தில், பூமியின் ராஜாக்கள் அனைவருக்கும் உயரமான ஸ்தலத்தில், தேவன் வீற்றிருப்பதைக் கண்டான். அவன், ''நான் ஆண்டவராகிய ராஜா உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கண்டேன் (அப்பொழுது அவன் உண்மையான ராஜாவைக் காண்கிறான்). அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது“ என்கிறான். சேராபீன்கள் கட்டிடம் எங்கும் பறந்து கொண்டிருப்பதை அவன் கண்டான். அவர்கள் இரண்டு செட்டைகளால் தங்கள் முகங்களை மூடி, இரண்டு செட்டைகளால் தங்கள் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து கொண்டிருந்தனர். அவர்கள், “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என்றுஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். என்னே ஒரு இனிய இசை, என்னே ஒரு தாளம்!'' அவர்கள்: ”சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என்று மெல்ல வாய்க்குள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்'' என்று நீங்கள் கூறலாம். (சகோ. பிரன்ஹாம் அதை மெல்ல உச்சரித்துக் காண்பிக்கிறார் - ஆசி). இல்லை. அவர்களுடைய சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்ததாக ஏசாயா கூறுகிறான். அவர்கள், “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்”, என்று மெல்ல சொல்லிக் கொண்டிருக்கவில்லை (சகோ. பிரன்ஹாம் மறுபடியும் மெல்ல உச்சரித்துக் காண்பிக்கிறார் - ஆசி). ஓ, “என்ன ஒரு சத்தம்!'', ”அவர்களுடைய சத்தத்தால் நிலைகள் அசைந்தது“ என்று ஏசாயா கூறுகிறான். தேவனுடைய பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த தேவதூதர்கள். ”சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்“ என்று உரக்க சத்தமிட்டுக் கொண்டிருந்னர். என்னே ஒரு தரிசனம்! வ்யூ ஓ, என்னே! 64 கவனியுங்கள், உசியாவின் பேரில் அதிகமாக சார்ந்திருந்து, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் காரணமாக அவன் மரித்ததை ஏசாயா கண்ட பின்பு, தேவனுடைய அருகில் இருந்த சேராபீன்கள், ''சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்“ என்று ஆர்ப்பரிப்பதைக் காண்கிறான். இந்த பரிசுத்த தேவதூதர்கள் தங்கள் முகத்தை மூடிக் கொண்டனர். பரிசுத்த தேவனின் மத்தியிலிருந்த பரிசுத்த தேவதூதர்கள் தங்கள் பரிசுத்த முகங்களை மூடிக் கொண்டனர் என்னும்போது, நாம் எம்மாத்திரம்? இப்பொழுது... ஓ, மெதோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, பெந்தெகொஸ்தேயினரே, நாம் எம்மாத்திரம்?தேவனுடைய சமூத்தில் நிற்பதற்கென, பரிசுத்த தேவதூதர்கள் தங்கள் பரிசுத்த முகங்களை மறைத்துக் கொண்டனர் என்னும் போது; அவர்கள் உண்மையில் தேவதூதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். தேவதூதர்கள் அங்கு நிற்பதில்லை. சேராபீன்கள் மாத்திரமே. அவர்கள் தேவதூதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். தேவன் மிகவும் பரிசுத்தரானதால், பரிசுத்த தேவனின் சமூகத்தில் நிற்க அவர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டியதாயிற்று. அவர்கள் சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என்பதே. வ்யூ! தேவனுடைய சமூகத்தில் நிற்க அவர்களுக்கு ஒரு விசேஷித்த மறைப்பு... நமக்கு எந்த விதமான மறைப்பு அவசியம்? அவர்களுக்கு மறைப்பு அவசியமாயிருந்தது. 65 இதை இப்பொழுது கூற விரும்புகிறேன்: இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லாவற்றிற்கும் போதுமானதாயுள்ளது. பாருங்கள்? கிறிஸ்து சேராபீன்களுக்காக மரிக்கவில்லை. இல்லை, இல்லை அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அவர் தேவதூதர்களுக்காக மரிக்கவில்லை. அவர் பாவிகளுக்காக மரித்தார். அவர் பரிசுத்தர்களுக்காக மரிக்கவில்லை. அவர் அசுத்தர்களுக்காக மரித்தார். உன்னை பரிசுத்தன் என்று நீ எண்ணும் வரைக்கும், அவரால் உனக்கு ஒரு உபயோகமுமில்லை. ஆனால் நீ ஒன்றுமில்லை என்று கருதும் போது அப்பொழுது அவர் உனக்காகவும் மரித்தவராகின்றார். பாருங்கள்? நீ ஒன்றுமற்றவன் என்று உணரும் போது, அவர் மரித்தது உனக்காகவும் கூட. தேவன் பரிசுத்தர். அவருக்கு பரிசுத்தத்தை தவிர வேறொன்றும் இல்லை. அது ஒன்று மாத்திரமே தூய்மை. 66 இப்பொழுது இந்த செட்டைகளைக் குறித்து சில நிமிடங்கள் கவனிப்போம். சேராபீன்கள் இரண்டு செட்டைகளால் தங்கள் முகத்தை மூடிக் கொண்டதாக நாம் காண்கிறோம். என்னே, யோசித்துப் பாருங்கள் பரிசுத்த தூதர்களும் கூட தங்கள் பரிசுத்த முகங்களை பரிசுத்த தேவனின் சமூகத்தில் மூட வேண்டியதாயிருந்தது. அவர்கள் சொல்லக் கூடிய ஒன்றே ஒன்று, “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், ”சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்“ என்பதே. அவர்கள் இரவும் பகலும் ஆர்ப்பரித்ததாக கூறப்பட்டுள்ளது. தேவன் இறங்கி வருவதற்கு அதுவே முதல் படி இரவும், பகலும் ஓயாமல் துதிப்பது. நாங்கள் அதிகம் சத்தமிடுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ''பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்“ என்னும் ஒரு சேராபீனின் சத்தத்துக்கே தேவாலயத்தின் நிலைகள் அசைந்ததானால், சிங்காசனத்தை சுற்றிலும் லட்சக்கணக்கானவர் இடும் சத்தத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனின் சத்தமே தேவாலயத்தை அசைத்தது. ஆனால் லட்சக்கணக்கானவர்கள் பயபக்தியுடன் தங்கள் முகங்களையும் கால்களையும் செட்டைகளினால் மூடிக்கொண்டு சிங்காசனத்தை சுற்றிலும், ”சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்“, சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று ஓயாமல் ஆர்ப்பரிக்கின்றனர். 67 இன்று பரிசுத்தத்தைக் குறித்து பேசப்படும் எதற்கும் மரியாதையோ பயபக்தியோ கிடையாது. நீங்கள் பரிசுத்தத்தைக் குறித்து பேசினால், உருளும் பரிசுத்தர் என்றழைக்கப்படுவீர்கள். தேவனுக்கோ, அல்லது அவருடைய மக்களுக்கோ, அல்லது அவருடைய வார்த்தைக்கோ மரியாதையோ பக்தியோ செலுத்தப்படுவதில்லை. அப்படியானால் இந்த கூட்டம் எங்கு முடிவடையப் போகின்றது? (பென், நீ கூறினது சரியே. மகனே, அன்று நீ அதை ஆணித்தரமாய் கூறினாய். ஆம், அது ஏறக்குறைய உண்மை). அப்படியானால் அவபக்தியுள்ள இந்த கூட்டம் எங்கு முடிவடையும்? அது எங்கு முடிவடையும்? (அதுதான்), தேவனிடம் மரியாதையே இல்லாதவர். 68 உங்களுக்குத் தெரியுமா, முன்பெல்லாம் ஒரு ஆண் அல்லது பெண் தன்னை கிறிஸ்தவர் என்று கூறிக் கொண்டால், ஜனங்கள் அதற்கு மதிப்பு கொடுத்தனர். ஆனால் இன்றைக்கோ அவர்களால் முடியும் அளவுக்கு கேலி செய்கின்றனர். பாருங்கள்? அவபக்தியுள்ள கூட்டம். என்னே! ஏன்? ஏன் தெரியுமா? இதுதான் அதற்கு காரணம். இதுதான் சத்தியம் என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அவர்கள் தேவனை அறியாதவர்களாயிருக்கின்றனர். “கர்த்தருடைய தூதர்கள் தேவனுக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்குகின்றனர்” என்று வேதம் கூறியுள்ளதென்று அவர்களுக்குத் தெரியாது. தேவ தூதர்கள் வந்து அவர்களை விஜயம் செய்வது மாத்திரமல்ல, அவர்கள் கூடாரம் அடித்து தங்குகின்றனர். ஆமென்! “கர்த்தருடைய தூதர்கள் அவருடைய நாமத்துக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்குகின்றனர்” அங்கு இரவும் பகலும் தங்குகின்றனர். அந்த கறுப்பு நிற சகோதரன், “தூதர்கள் என்னைக் காத்துக் கொண்டேயிருக்கின்றனர்” என்னும் பாடலைப் பாடினார். இரவும் பகலும் தூதர்கள் என்னைக் காக்கின்றனர். அது உண்மை. இரவும் பகலும் எல்லா நேரத்திலும் தூதர்கள் என்னைக் காக்கின்றனர் என்பது. சிறு பிள்ளைகளைக் குறித்து இயேசு, “இந்த சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரம பிதாவின் சமூகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள்'' என்றார் பாருங்கள்? அவர்கள் பாளயமிறங்கி எப்பொழுதும் அவர்களைக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தேவபக்தியற்ற ஜனங்கள் அதை விசுவாசிப்பதேயில்லை. தேவபக்தி, அவபக்தி என்பவைகளைக் குறித்து, கர்த்தருக்கு சித்தமானால், நாளை காலை பார்க்கலாம். 69 கவனியுங்கள், அவர்கள் அதை விசுவாசிப்பதும் கூட கிடையாது. அவர்கள் எல்லா நாணயத்தையும், மரியாதையும், பயபக்தியையும் இழந்துவிட்டனர், என்றாலும் அவர்கள் சபைக்கு செல்கின்றனர். இன்றைக்கு மிகவும் அவபக்தியுள்ள கூட்டம் எது என்றால் சபைக்கு செல்லுகிற கூட்டமே. அது உண்மை. இரவில் கள்ளச்சாராயம் கடத்துபவன் குடி போதையில் தெருவில் வந்து கொண்டிருக்கும் போது அவனிடம் நீங்கள் கர்த்தரைக் குறித்து பேசுவீர்களானால், அவன் நின்று உங்களிடம் பேசுவான். ஆனால் விசுவாசிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பாசி பிடித்த சில சபை அங்கத்தினர்கள் உங்களைப் பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது வேண்டாம்... நிச்சயமாக. அவ பக்தியுள்ளவகள். அவர்களுடைய கூட்டத்தில் நீங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் அவர்கள் கருதுகின்றனர். பாருங்கள்? அது உண்மை. அவபகத்தியுள்ளவர்கள். 70 இந்த தூதர்கள் தேவனுடைய சமூகத்திலிருக்கும் போது, அவர்கள். அதை விசுவாசித்தான்... தாவீது கூறினான் (சில நாட்களுக்கு முன்பு ஓரிரவில் ஏதோ ஒன்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, இதை நான் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கும்). தாவீது, கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். நான் அசைக்கப்படுவதில்லை என்றான். அவன் மேலும், “அப்படி நான் செய்யும் போது, என் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்'' என்றான். ஆம், ஐயா. ”ஏனெனில் எனக்குத் தெரியும்... என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். ஏனெனில் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்“ என்றான். நீங்கள் எங்கு சென்றாலும், கர்த்தரை முன்பாக வையுங்கள். ஒரு மனிதன் கோபங்கொண்டு உங்களை திட்டினால், உங்களுக்கும் அவனுக்குமிடையே தேவனை வையுங்கள். ஒருவன் உங்களை உருளும் பரிசுத்தன் என்று அழைத்தால், உங்களுக்கும் அவனுக்குமிடையே தேவனை வையுங்கள். கணவர் கோபங்கொண்டால், தேவனை முன்பாக வையுங்கள். பிள்ளைகள் உங்களுக்கு கோபமூட்டினால், தேவனை முன்பாக வையுங்கள். பாருங்கள்? நீங்கள் செய்யும் அனைத்திலும், தேவனை முன்பாக வையுங்கள். உங்கள் தகப்பனும் தாயும் நீங்கள் திருந்த வேண்டுமென்பதற்காக உங்களை அடித்தால், தேவனை முன்பாக வையுங்கள். அதைக் குறித்து தேவன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து” (நீதி.22:6). பாருங்கள்? தேவனை முன்பாக வைக்க எப்பொழுதும் ஞாபகம் கொள்ளுங்கள். தேவனை உங்களுக்கு முன்பாக வையுங்கள். அப்பொழுது உங்களுக்கு தேவனிடம் பயபக்தியும் மரியாதையும் உண்டாயிருக்கும். அது உண்மை. 71 இப்பொழுது கவனியுங்கள் இரண்டு செட்டைகளால் அவன் தன் முகத்தை முடிக்கொண்டு, இரண்டு செட்டைகளால்... அது பயபக்தியை, தேவனுடைய சமுத்தில் பயபக்தியை குறிக்கிறது. வணங்குதல் - அவன் முகத்தை மூடிக் கொண்டான். நமது முகங்களை மூடிக் கொள்வதற்கு நமக்கு செட்டைகள் இல்லை. அதற்கு பதிலாக நாம் அவருடைய பாதம் பணிந்து, நமது தலைகளை வணங்கி, பயபக்தியுடனும் மரியாதையுடனும் அவருடைய மகத்துவத்தை உணர்ந்து ஜெபிக்கிறோம். ஆம் ஐயா! இரண்டு செட்டைகளால் அவன் பாதங்களை மூடினான். பாதங்களை மூடுதல் என்பது தாழ்மைக்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டாயுள்ளது. மோசே செய்தது போல் தேவன் அவனிடம், அவன் நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்று சொன்ன போது, அவன் பாதரட்சைகளை கழற்றிப் போட்டு தேவனுக்கு பயபக்தியுடன் மரியாதை செலுத்தி... கர்த்தருடைய தூதன் அந்த அக்கினி ஸ்தம்பத்தில் அவனுக்கு முன்பாக வந்தபோது, அவன் தரையில் முகங்குப்புற விழுந்தான். மரியாதை யோவான் ஸ்நானன் இயேசு வருவதைக் கண்டபோது, “அவன் மேல் அவ்வளவு மரியாதை கொண்டிருந்ததனால், அவருடைய பாதங்களைத் தொடவும் நான் பாத்திரன் அல்ல'' என்றான். பாருங்கள், பாதங்கள் மரியாதைக்கு அடையாளம். பாருங்கள்? 72 ஓ, சிந்தையுள்ளவர்களாயிருங்கள். ஒன்றைக் குறித்து மாத்திரம் நீங்கள் சிந்தையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அதுதான் உங்கள் சிறுமை. நீங்கள் தேவனை அடைய விரும்பினால், உங்களை மிகவும் சிறுமைப்படுத்திக் கொள்ளுங்கள். உசியா செய்தது போல் உங்களை பெரியவர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உசியா தேவாலயத்துக்கு சென்று, “நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை கேட்க உங்களுக்கு உரிமையில்லை'' என்றான். பாருங்கள்? அவன் தன்னை தாழ்த்தி, கிறிஸ்துவின் ஊழியக்காரரே, என்னை மனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தால், அவனுக்கு குஷ்டரோகம் வந்திருக்காது. அது உங்களுக்கு அளிக்கப்பட்ட பணியென்று அறிகிறேன். தேவன் அதற்கென்று உங்களை அழைத்திருக்கிறார். அது உங்கள் உத்தியோகம். நீங்கள் போய் செய்யுங்கள். ஐயன்மீர், “என் செயலுக்கு நான் வருந்துகிறேன்” என்று அவன் கூறி அங்கிருந்து வெளி நடந்திருந்தால், அவனைக் குறித்து வேறு விதமாக இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும், ஆனால் அவனைத் திருத்த முயன்ற போது, அவன் கோபங்கொண்டான். நீங்கள் ஜனங்கள் செய்யும் தவறை அவர்களுக்கு உணர்த்தி காண்பித்தால், அவர்கள் சபையை விட்டு விலகுகின்றனர். நீங்கள் பெண்களிடம் குட்டை தலைமயிர் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னால், “அவர்கள் அப்படி செய்ய அனுமதிக்கும் வேறு இடத்துக்கு நாங்கள் செல்கிறோம்'' என்கின்றனர். 73 சில நாட்களுக்கு முன்பு ஒரு ஸ்திரீ சென்றாள்... என் மனைவியை நான் அனுப்பினேன். நாங்கள் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தோம். என் மனைவிக்கு அவள் தலைமயிரைக் கழுவ நேரமில்லை. அவள்... நான் அவளிடம், சிகை அலங்கரிக்கும் இடத்திற்கு சென்று தலைமயிரைக் கழுவிக் கொள்ளக் கூறினேன். அவள் அங்கு சென்றாள். அங்கிருந்த பெண்ணுக்கு அவள் தலைமயிரை கொண்டைகட்டவும் தெரியவில்லை. அதை அவள் சுருட்டி, உச்சந் தலையில் கட்டிக் கொடுத்துவிட்டாள். அவள், ''நீண்ட மலைமயிர் உடையவர்களுக்கு நான் இதுவரை தலை கழுவிக் கொடுத்ததில்லை“ என்றாள். அவளுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. ''எனக்கு தெரியாது'' என்றாள். ஓ, என்னே! பார்த்தீர்களா? அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஏன்? அவர்கள் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பலவீனமான பிரசங்க பீடங்களே இதற்கு காரணம் இந்த பலவீனமான பிரசங்கபீடங்கள் உண்மையை எடுத்துக் கூறுவதில்லை. அவர்கள் ஒப்புரவாகிவிடுகின்றனர். பாருங்கள்? நலம். அதை நீங்கள் கேட்பது நலம்... அவர்களிடம் நீங்கள் பேசினால், “அவர்கள் கோபங்கொண்டு நான் இனிமேல் அந்த உருளும் பரிசுத்தன் பேசுவதைக் கேட்க மாட்டேன்” என்று சொல்லி எழுந்து போய் விடுகின்றனர். பாருங்கள்? உசியாவே, போ. அது உண்மை. 74 குஷ்டரோகம். அந்த விதமான குஷ்டரோகத்தைக் காட்டிலும் நான் சரீர குஷ்டரோகத்தை பெற்றுக் கொள்வேன். ஏனெனில் அது ஆத்தும் குஷ்டரோகம். பாருங்கள்? நீங்கள் சென்று அங்கு... உங்களுக்கு குஷ்டரோகம் பிடிக்குமானால் - பாவம் என்பது குஷ்டரோகத்தை விட மோசமானது. அது ஆத்தும குஷ்டரோகம். உசியா தன் பிதாக்களுடன் நித்திரையடைந்தான் என்று வேதம் கூறுகிறது. அவன் தவறு செய்த போதிலும் இரட்சிக்கப்பட்டிருக்கக் கூடும். அதனால் நீங்கள் ஒன்றைச் செய்யக் கூடாதென்று அறிந்திருந்தும் அதை செய்வீர்களானால், உங்களுக்கு ஆத்தும குஷ்டரோகம் பிடிக்கும். அப்பொழுது ஆத்தும குஷ்டரோகியை பிரவேசிக்கச் செய்ய ஒரு வழியுமில்லை, அது உங்களுக்கு தெரியும். எனவே, உங்களை சிறுமைப்படுத்திக் கொள்ளுங்கள். தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். பெருமை கொண்டு உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து அது உண்மையாவென்று கண்டு கொள்ளுங்கள். 75 அண்மையில் நான் ஒருவரிடம் கூறினேன். அவர், ''சகோ. பிரன்ஹாமே, நீர் 'இயேசு மாத்திரம்' என்று கேள்விப்படுகிறேனே“ என்றார். நான், ''நீங்கள் தவறாக கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான், “இயேசு மாத்திரம் அல்ல” என்றேன். அவர், ''நீங்கள் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்களே'' என்றார். நான், ''அது என்னை இயேசு மாத்திரமாக செய்துவிடாது. இயேசு மாத்திரம் உபதேசக்காரர்கள் மறுஜென்மத்துக்கு (regeneration) ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். எனக்கு அதில் விசுவாசமில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும் போது, அது உங்கள் ஆத்துமாவிலுள்ள பாவங்களை போக்குகிறது என்று நான் விசுவாசிப்பதில்லை. பேதுரு, “முதலாவதாக மனந்திரும்பி, திரும்ப வாருங்கள். ஏனெனில் நீங்கள் இலக்கு தவறிவிட்டீர்கள். அதன் பிறகு சென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறான்” என்றேன். மனந்திரும்புங்கள் அதன் பிறகு நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்கள் என்பதை உலகுக்கு காண்பியுங்கள். அப்படிதான் நான் விசுவாசிக்கிறேன்... பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தான் மறுபடியும் பிறத்தல் என்று நான் விசுவாசிப்பதில்லை. அது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அல்ல, அது மறுபடியும் பிறத்தல். நாம் இரத்தத்தால் மறுபடியும் பிறக்கிறோம். இரத்த அணுக்கள்... அதாவது ஜீவ அணுக்கள் இரத்தத்திலிருந்து வருகின்றன. நீங்கள் பரிசுத்த ஆவியினால் சரீரத்துக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறீர்கள், ஆனால் இரத்தத்தினால் பிறக்கிறீர்கள், முற்றிலுமாக. நீங்கள் உங்கள் தகப்பனின் இரத்தத்தினால் பிறக்கிறீர்கள். நாம் என் பிதாவும் உங்கள் பிதாவுமாகிய - நம்முடைய பிதாவாகிய - கிறிஸ்துவின் இரத்தத்தினால் பிறந்தவர்கள். ஆம் ஐயா! எனவே, பாருங்கள், நாம் அந்த உபதேசத்தை விசுவாசிப்பதில்லை. நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது நம்மை “இயேசு மாத்திரமாக” செய்துவிடாது. இல்லவே இல்லை. இல்லை, ஐயா! 76 ஆம், ஐயா! மோசே, ''உன் பாதரட்சையை கழற்றிப் போடு“, என்னும் தேவனுடைய சத்தத்தைக் கேட்ட போது, அவருடைய சமூகத்தில் தன்னைத் தாழ்த்தினான். மோசே தரை மட்டும் குனிந்து தான் அணிந்திருந்த பாதரட்சைகளைக் கழற்றிப் போட்டான். பாருங்கள்? அது உண்மை. பவுலை அந்த ஒளி தாக்கி தரையில் வீழ்த்தின்போது... அவர், ''சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?“ என்றார். அவன், ''ஆண்டவரே, நீர் யார்?“ என்றான். பாருங்கள், தரை மட்டும் விழுந்துவிட்டான். ''ஆண்டவரே, நீர் யார்?'' அவர், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே”, (அந்த அக்கினி ஸ்தம்பம்) - இயேசு நானே, “முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்'' என்றார். அவன், ''ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?'' என்றான். அவன் ஆயத்தமாகிவிட்டான். இயேசு வருவதை யோவான் ஸ்நானன் கண்டான். மிகப் பெரிய மனிதர்களில் ஒருவன். ''ஸ்திரீகளிடம் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் எவனுமில்லை“, என்று இயேசு கூறினார். அவர் வருவதை யோவான் கண்டபோது, அவன் மிகச் சிறியவன் என்றுணர்ந்து, ”அவருடைய பாதரட்சைகளை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல“ என்றான். ஆமென்! 77 எப்பொழுதுமே கவனியுங்கள். பெரிய மனிதன் தன்னை தாழ்த்திக் கொள்வான். மேலே போகும் வழி கீழேயுள்ளது. எப்பொழுதுமே. உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். அப்பொழுது தேவன் உங்களை உயர்த்துவார். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். ''ஓ என்னே!, அது எனக்குப் பிரியம். உங்களை தாழ்த்திக் கொள்ளுங்கள். எப்பொழுதுமே சிறியவர்களாயிருங்கள். பெரியவர்களாயிராதிருங்கள். சிறியவர்களாயிருங்கள். பாருங்கள்? நமது மத்தியில் எப்படியும் தேவன் ஒருவர் மாத்திரமே பெரியவர். அது உண்மை. நீங்கள், “இது பரிசுத்த சபை, பரிசுத்த ஜனம்” என்று அழைக்கிறீர்கள். ஓ, இல்லை! அது பரிசுத்த தேவனும் (அது உண்மை), பரிசுத்தமற்ற சபையும், பரிசுத்தமற்ற ஜனமுமே. அது உண்மை. பரிசுத்தசபை என்று ஒன்று கிடையாது, அது சபையில் பரிசுத்த தேவன். அது பரிசுத்த ஜனம் அல்ல, ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவி. அப்படி சொல்லும்போது, நீங்கள் ஜனங்களைக் குறித்து பேசாமல், ஜனங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியைக் குறித்து பேசுகின்றீர்கள். ஆமென், ஆமென் அதுதான் சரியான சொல். ஆமென்! அது என் இருதயத்தில் தோன்றினது. அதை நான் உணர்ந்தேன். ஆம், ஐயா! அப்படி நான் கூறினதால் அவர் பிரியம் கொண்டார். அது எனக்குத் தெரியும். மகிமை! ஆம், ஐயா! சரி. 78 உங்களை சிறுமைப்படுத்திக் கொள்ளுங்கள். தூதன் பயபக்தியுடன் தன் முகத்தை இரு செட்டைகளால் மூடிக் கொண்டான். அவன் பாதங்களை மூடி தன்னை தாழ்த்தினான். மற்ற இரு செட்டைகளைக் கொண்டு அவன் பறந்தான். அந்த ஒரு செட்டைகளைக் கொண்டு தன்னை செயலில் ஈடுபடுத்திக் கொண் டான். அவன் தேவனுக்கு முன்பாக தாழ்மையாயிருந்தான். அது மாத்திரமல்ல, அவன் சும்மா அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. அவன் செயலில் ஈடுபட்டான். சபையும் அதையே செய்ய வேண்டும். ஆமென்! அவன் செயலில் ஈடுபட்டான். அவனிடம் என்ன இருந்ததோ, அதை கொண்டு அவன் புறப்படத் தயாராக இருந்தான். ஆம், ஐயா! அவன் சொல்லக் கூடிய ஒன்றே ஒன்று, ''சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்பதே. ஆனால் அவன் அவ்வாறு கூறிக் கொண்டே செயல் ட்டான். அது உண்மை! அவன் செயல்பட்டான். இன்றிரவு சபைக்கு அது தான் தேவை. முதலாவதாக பயபக்தியாயிருங்கள், இரண்டாவதாக தாழ்மையுள்ளவர்களாயிருங்கள். அதன் பிறகு செயல்படுங்கள். ஆம் ஐயா! 79 தூதன் தீர்க்கதரிசிக்கு காண்பித்த போது... அவன் தீர்க்கதரிசிக்கு, தான் எவ்வாறு ஊழியக்காரருக்கு எடுத்துக் காட்டாயிருக்கிறான் என்றும், அவன் என்ன செய்யப் போகிறான் என்றும் காண்பித்தான். இந்த தூதன் என்ன செய்தான்? அவன், “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று இட்ட சத்தம் தேவாலயத்தின் நிலைகளை அசைத்ததை தீர்க்கதரிசி கண்டான். கட்டிடம் அசைந்தது... அவன் மறுபடியும், “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று உரக்க சத்தமிட்டான். அப்பொழுது கட்டிடம் அசைந்தது. ஏசாயா, “ஐயோ அதமானேன்!” என்றான். ஒரு தீர்க்கதரிசி, உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, வேதத்தில் முக்கிய தீர்க்கதரிசி, “ஐயோ அதமானேன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே'' என்றான். தேவனுடைய வார்த்தை தன்னிடமாக வரத் தக்கதாக இருந்த அந்த மனிதன், ஒரு தீர்க்கதரிசி தன்னைத் தாழ்த்திக் கொள்வதைப் பாருங்கள். அவன் தரிசனத்தில் நடப்பதைக் கண்ட போது, ”ஐயோ!அதமானேன். நான் கர்த்தருடைய சமூகத்தைக் காணத் தக்கதாக அவ்வளவு அருகில் நின்று கொண்டிருக்கிறேன்'' என்றான். நம்முடைய நவீன அமெரிக்க மக்களோ, அதைக் காண நேரிட்டிருந்தால், அதை கேலி செய்து விட்டு, நடந்து சென்றுவிட்டிருப்பார்கள். அது உண்மை. 80 அவன் தரிசனம் வெளிப்படுவதைக் கண்ட போது. வெளிப்பட்ட ஒரு தரிசனம் (ஓ, தேவனே, பாவமுள்ள இந்த உலகத்தின் மீது இரக்கமாயிரும்!) - தரிசனம் அவனுக்கு முன்பாக வெளிப்பட்டபோது அவன், ''ஐயோ! அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். என்னில் நல்லது ஒன்றுமேயில்லை'' என்கிறான். நீங்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் பிரபிடேரியன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்தவன். நான் உட்கார்ந்து கொண்டு அப்படிப்பட்ட ஒன்றை கேட்க வேண்டிய அவசியமில்லை எனலாம். என்ன ஒரு வித்தயாசம், என்ன ஒரு வித்தியாசம்! ஞாபகம் கொள்ளுங்கள், இந்த தீர்க்கதரிசி தன் பிறப்பிலிருந்தே அழைக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு. இந்த ஊழியத்துக்கென்று முன்குறிக்கப்பட்டு, சத்தியத்தை தேடிக் கொண்டிருந்தான். அவன் ராஜாவுடன் கூட இருந்தான். தேவனுடைய கிரியைகள் வெளிப்படுவதை அவன் கண்டிருந்தான். இருப்பினும், அவனுக்கு ஒரு தரிசனம் உண்டானபோது அவன் தன்னை உயர்த்திக் கொள்வதற்கு பதிலாக, ''ஐயோ! அதமானேன். நாம் முடிந்துவிட்டேன். அது எனக்கு நேரிடப் போகிறது. தேவனுடைய மகிமையை என் கண்கள் கண்டதே“ என்கிறான். 81 இன்றைக்கு நாம் கர்த்தருடைய மகிமையைக் கண்ட பின்பும். நாம் பல இடங்களுக்குச் சென்று, ''உருளும் பரிசுத்தரின் கூட்டம், பைத்தியக்கார ஜனங்கள்“ என்கிறோம். நாம் ஒரு நிலையையும் அடையாததைக் குறித்து வியப்பொன்றுமில்லை. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இங்கு நான் வந்து ஏதாவதொன்றைக் கூறினால், இது ஜனங்களுக்கு உதவியாயிருக்க வேண்டுமென்று ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன். ஆம், அதற்கு நாம் பயபக்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவனிடமிருந்து தரிசனம் உண்டாகி, அது சத்தியமென்று அறியும்போது, நம்மால் முடிந்த வரைக்கும், அதற்கு எல்லாவிதமான மரியாதையும் செலுத்த வேண்டும். 82 ஏசாயா, ஐயோ! அதமானேன். இன்றிரவு நான் இக்கட்டிடத்தில் இருக்கிறேன் (இன்றோ வேறு எப்பொழுதோ). நான் தேவனுடைய மகிமையைக் காண்கிறேன். ஒரு தூதன் பேசுவதை நான் காண்கிறேன். அப்பொழுது ஏதோ ஒன்று அசைவதை நான் காண்கிறேன். மேலே நோக்கி பார்க்கும் போது, “தேவன் அங்கிருப்பதைக் காண்கிறேன். ஐயோ அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசம் பண்ணுகிறவன்” என்றான். என்ன நடந்ததென்று கவனியுங்கள். ஓ, அவர் என்ன செய்தார்? மனிதன் அவருடைய சமுகத்தில் மரியாதையுடனும், பயபக்தியுடனும் நடந்து கொள்ள வேண்டுமென்று தீர்க்கதரிசியாகிய ஏசாயாவுக்குக் காண்பித்தார் - பயபக்தியாயும், தாழ்மையுடனும் இருந்து, அதன்பிறகு செயல்பட வேண்டுமென்று. அது உண்மை! செயல்படுதல். 83 கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீயைப் போல். சகோதரனே, ஏதோ ஒன்று சம்பவித்ததை அவள் கண்ட போது, அவள் இரண்டு செட்டைகளைப் பெற்றவளாய் உடனே அங்கிருந்து பறந்து சென்றாள். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு மொண்டு கொண்டிருந்த அசுத்தமான தண்ணீரைப் பெற்றுக் கொள்ள யாக்கோபின் கிணற்றண்டைக்கு வந்தாள். ஆனால் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து அவள் பருகின போது, உடனே செயல்பட்டாள். அவள் இயேசுவிடம், ''ஐயா, நீர் எங்கு கல்வி கற்றீர்? உமக்கு எங்கிருந்து இது கிடைத்தது? இதை எப்படி கற்றீர்?'' என்றோ, ''எனக்கு ஐந்து புருஷர் இருப்பது உமக்கு எப்படி தெரியும்? என்னிலுள்ள தவறை நீர் எப்படி கண்டு கொண்டீர்? நான் சமாரியாவை சேர்ந்த ஸ்திரீ என்று உமக்கு எப்படி தெரியும்? இவையெல்லாம் உமக்கு எப்படி தெரியும்?', என்று அவள் கேட்கவில்லை. அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வரும் போது இவைகளை நமக்கு அறிவிப்பார் என்று அறிந்திருக்கிறோம்” என்றாள். ஓ, என்னே! அவள் வேத வாக்கியங்களின் மூலம் அதை கண்டு கொண்டாள். அதன்பிறகு அவள், ''மேசியா வரும் போது, இவைகளை நமக்கு அறிவிப்பார் என்று அறிந்திருக்கிறேன்'' என்றாள். அவர், ''நானே அவர்“ என்றார். 84 அவள் உடனே செயல்படத் தொடங்கினாள். அவள் ஊருக்குள்ளே அவளால் முடிந்த வரைக்கும் வேகமாக ஓடி, ''நான் செய்த காரியங்களை ஒரு மனிதன் எனக்கு அறிவித்தார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியா அல்லவா?'' என்றாள். அவள் சத்தியத்தை கண்டபோது, அதை உதைத்து தள்ளிவிடவில்லை. அவள் அதற்கு நிறைய மரியாதை செலுத்தினாள். அவள் அதற்கு அதிக ஆதரவு கொடுத்தாள். அவள் ஊருக்குள்ளே ஓடி, “வந்து பாருங்கள். என்னை நம்பாமல் போனால், என்னுடன் வாருங்கள்” என்றாள். மகிமை! இன்றிரவு நான் உருளும் பரிசுத்தன் என்னும் உணர்வை பெறுகிறேன். ஆம், ஐயா! உருளும் பரிசுத்தராயிருப்பதனால் நான் பெறும் உணர்வு இதுதான் என்றால். நான் உருளும் பரிசுத்தனாகவே இருக்கட்டும். ஆம், ஐயா! அவர் சரியென்று நான் அறிந்திருக்கிறேன். அவர் இங்கிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். அதே மேசியா, அதே தேவன் அதே கிறிஸ்து இன்றிரவு இந்த உஷ்ணமான கட்டிடத்தில் இருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். அதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும். ஆமென்! 85 அந்த மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மேலே கர்த்தருடைய தூதன் நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள். அவருடைய பெயர்... அவர் ஒரு குருவானர், திரு. விட். அவர் விர்ஜினியாவைச் சேர்ந்தவர் (அது உண்மை). அவர் நரம்பு தளர்ச்சியினால் அவதியுறுகிறார். நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் சுகமடைந்து வீடு செல்லலாம் ஐயா, அதை நீங்கள் விசுவாசிக்கறீர்களா? சரி. சுகமடைந்து வீடு செல்லுங்கள். நரம்பு தளர்ச்சி போய்விட்டது. ...அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பவர். அவர் பெயர் மோரியா. அவர் இல்லினாயிலிருந்து வருகிறார். அவருக்கு மலக்குடல் கோளாறு உள்ளது. ஐயா, நீங்கள் விசுவாசித்தால் ...நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுக்கு அந்நியன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் அது உங்களை விட்டுப் போய்விடும். அல்லேலூயா! நெருப்புத் தழல் தீர்க்கதரிசியைத் தொட்டு அவனை முழுவதும் சுத்திகரித்த பின்பு ''யார் நமது காரியமாகப் போவான்?“, என்று தேவனுடைய சத்தம் கேட்ட போது அவன், ''இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்'' என்றான். 86 எப்படிப்பட்ட உபத்திரவம் வந்தபோதிலும், சுமக்க வேண்டிய சிலுவை எவ்வளவு பளுவாக இருந்த போதிலும், “இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்.'' அவர் அதே மேசியா. அவர் இப்பொழுது இங்கிருக்கிறார். நான் மறுபடியும் அவரைக் காண்கிறேன். ஆமென் அது என்ன? சமாரியா ஸ்திரீ உடனே செயல்பட்டாள். அவள் செட்டைகளைப் பெற்று பறக்கத் தொடங்கினாள். அவள் உடனே செயல்படத் தொடங்கினாள். ஒருநாள் பேதுரு அப்போஸ்தலன் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்து... அவன் இரவு முழுவதும் மீன் பிடித்தும் அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இயேசு அவனிடம் வந்து, ''படகுக்கு மறுபுறம் வலையைப் போடு“ என்றார். அவன், ''ஆண்டவரே, நான் மீன் பிடிப்பவன் மீன்கள் எப்பொழுது அகப்படும் என்றும் எப்பொழுது அகப்படாது என்றும் எனக்குத் தெரியும். அவை எங்கிருக்கும் என்றும் எங்கிருக்காது என்றும் எனக்குத் தெரியும். நான் இரவு முழுவதும் மீன்பிடித்தும், ஒரு சிறு மீன்கூட எனக்குக் கிடைக்கவில்லை. நீர் அந்த பக்கம் வலையைப் போடச் சொல்கிறீர்... அங்கு மீன்கள் கிடையாது என்று எனக்குத் தெரியும். ஆயினும் ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின் படியே வலையைப் போடுகிறேன்“ என்றான். அவன் என்ன செய்தான்? செயல்பட்டான். ஆமென்! 87 இங்கு குளம் நிறைய தண்ணீர் உள்ளது. நீங்கள் இயேசுவின் நாமத்தில் இதுவரைக்கும் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், நீங்கள் செயல்பட இதுவே தருணம். நீங்கள் சபை அங்கத்தினராயிருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் தேவனை அறியாதவர்களாயிருந்தால், நீங்கள் செயல்பட இதுவே தருணம். சரியா? பயபக்தியுடன் உங்கள் முகத்தை மூடிக் கொள்ளுங்கள். தாழ்மையுடன் உங்கள் கால்களை மூடிக் கொள்ளுங்கள். முழங்கால்படியிட்டு உடனே செயல்படுங்கள். நீங்கள் தேவனை அறியாமலிருந்தால், உடனே செயல்படுங்கள். பார்வையிழந்த குருடனிடம் இயேசு பேசி, தரையிலே துப்பி சேறுண்டாக்கி, அவன் கண்களில் பூசி, அவனைக் கழுவச் சொல்லி, இப்படியாக அவனுக்குப் பார்வையளித்த பிறகு, அவன் என்ன செய்தான்? அவன் உடனே செயல்பட்டு, அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம் பண்ணினான். அவன் அதை தனக்குள்ளே வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் சகோதரனே அவருடைய கீர்த்தியை சுற்றுவட்டாரங்களில் பரப்பினான். அவன் என்ன செய்தான்? செயல்பட்டான். 88 ஒரு முறை ஒரு குருடன் இயேசுவால் சுகம் பெற்றான்... அவர்கள் அவனிடம், “அவன் பாவியான மனுஷன், அவனை உனக்குத் தெரியாது” என்றனர். அவன், அவர் பாவியோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும். நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன் என்றான். அவன் என்ன செய்தான்? செயல்பட்டான். சபை அதை தான் செய்யவேண்டும். செயல்படுங்கள் நாம் அதிக முறைமைகளைப் பெற்றுள்ளோம். நமக்கு உலக கெளரவம் மிக அதிகமாயுள்ளது. நாம் செயல்பட வேண்டியது அவசியம். ஆமென் அவன் அவருடைய கீர்த்தியை எல்லாவிடங்களிலும் பரப்பினான். 89 பெந்தெகொஸ்தே நாளில் கூடியிருந்தவர்களுக்கு அதிகம் தெரியாது. அவர்களில் சிலர் தங்கள் பெயர்களைக் கையொப்பமிடவும் கூட அறிந்திருக்கவில்லை. அவர்கள் பயந்து போயிருந்தனர். ஒரு நாள் அவர்கள் என்ன செய்தனர்? அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து மேலறைக்கு சென்றனர். அவருடைய வார்த்தையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஓ, இன்றைய மக்கள் அவருடைய வார்த்தையை மாத்திரம் ஏற்றுக் கொள்ளுவார்களானால், உடனே செயல்படுவார்கள். “எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்” லூக்கா 24:49. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்” அப். 1:8. 90 ''என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில்இருங்கள்“ என்று லூக்கா 24:49 உரைக்கிறது. எவ்வளவு நேரம்? ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், பத்து நாட்கள், நான்கு மாதங்கள் அல்லது ஆறு மாதங்களா? அது வரைக்கும்! அது எவ்வளவு நேரம்? அது வரைக்கும். நீங்கள் ஒன்றை தேவனிடத்தில் கேட்கும்போது, அது கிடைக்கும் வரைக்கும் காத்திருங்கள். ஆமென் எது வரைக்கும்? அது நிறைவேறும் வரைக்கும். அதை உரிமை கோருங்கள் அதை விசுவாசியுங்கள் அதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். செயல்படுங்கள். அதைக் குறித்து சாட்சி கொடுங்கள் சாட்சி கொடுங்கள் பயப்படாதீர்கள், செயல்படுங்கள். அவர்கள் மேலறையில் என்ன செய்தனர்? தேவனை துதித்துக் கொண்டிருந்தனர். எதற்காக? வாக்குத்தத்திற்காக. அது நிறைவேறும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். பார்த்தீர்களா? செயல்படுங்கள் வாக்குத்தத்தம் நிறைவேறும் வரைக்கும் தேவனை துதித்துக் கொண்டேயிருங்கள். உங்களுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டுள்ளது. 91 தேவன் சுகமளிப்பவர் என்று நீங்கள் விசுவாசித்தால், செயல்படுங்கள். இப்பொழுது அவர் உங்களை அழைக்கப் போகிறார் என்று விசுவாசித்து, நீங்கள் அவரைப் பற்றிக் கொண்டிருந்தால், செயல்படுங்கள். ஆமென் செயல்படுங்கள். உங்களுக்கு இரண்டு செட்டைகள் உள்ளன. அவைகளை உபயோகியுங்கள். செயல்படுங்கள் செட்டைகளை மேலும் கீழும் அடித்து, ''ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்; ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்'' என்று சொல்லுங்கள். நீங்கள் “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று சப்தமிட முடியாது”. நீங்கள், ''ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்'' என்று சொல்ல வேண்டும். செயல்படுங்கள்! ஆமென்! வானத்திலிருந்து பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போன்ற சத்தம் வரும் வரைக்கும் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அவர்கள் மும்முரமாக செயல்பட்டனர். சகோதரனே, சகோதரியே, இக்கடைசி நாட்களில் நாம் நடக்கக் கண்டவை நம்மை செயல்படச் செய்திருக்க வேண்டும். ஆமென் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அது முற்றிலும் உண்மை. அது ஏதோ முக்கியமில்லாத ஒன்று போல நாம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்... பெந்தெகொஸ்தே ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, கர்த்தர் ஒரு கிரியை செய்வாரானால், அவர்கள், ''உம், அது நல்லது'' என்று சொல்லிவிட்டு சும்மா இருந்துவிடுகின்றனர். ஓ, என்னே தேவனுக்கு அருகில் உள்ள சேராபீன் போலவே இல்லை. அது உண்மை. ஒரு செய்தியாளன், இன்னுமாக தேவனோடு நெருங்கி இருக்கிறவன்... அவருடைய பிள்ளை என்னும் முறையில் வெண்கல பலிபீடத்துக்கு அப்பால் இருக்கின்றீர்கள். 92 சேராபீன் வெண்கல பலிபீடத்தண்டையில் தான் இருக்கிறான். ஆனால் நீங்களோ குமாரன் அல்லது குமாரத்தி என்னும் முறையில் தேவனுடைய சமூகத்துக்கே செல்கின்றீர்கள். நீங்கள் எந்த ஒரு ஆசாரியன் மூலமாகவோ மற்ற காரியங்கள் மூலமாகவோ செல்ல வேண்டியதில்லை. அவர் தான் உங்கள் ஆசாரியன். பாருங்கள்? குமாரரும் குமாரத்திகளும் என்னும் முறையில் நீங்கள் நேராக அவருடைய சமூகத்துக்கே செல்கின்றீர்கள். சகோதரனே, நமக்கு செட்டைகளை விட இன்னும் அதிகம் உள்ளதென்று விசுவாசிக்கிறேன். ஆமென்! நமக்கு பரிசுத்த ஆவி உள்ளது. அது உண்மை. நாம் பயபக்தியோடும் தாழ்மையோடும் செயல்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏதோ ஒன்றை வேறொவர் மேல் சுமத்தும் செயல் அல்ல, ஆனால் மிகுந்த பயபக்தியோடும் தாழ்மையோடும் நாம் செயல்பட்டு, ''ஐயோ அதமானோம். சர்வ வல்லமையுள்ள தேவனின் சமூகத்தை நாங்கள் கண்டோமே'' என்று சொல்ல வேண்டும். அவர் கூறினவிதமாகவே தரிசனங்கள் உண்டாவதை நாம் கண்டிருக்கிறோம். அவர், ''நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்“ என்று கூறியிருக்கிறார். 93 நாம் அதிக கிரியைகள் நடப்பதைக் கண்டிருக்கிறோம்... வேதத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளதைக் காட்டிலும் அதிக கிரியைகள் ஒரே ஒரு கூட்டத்தில் நடந்துள்ளதை நாம் கண்டிருக்கிறோம். அது உண்மை. அவருடைய 33 1/2 ஆண்டு காலத்தில் நிகழ்ந்ததைக் காட்டிலும் அதிக கிரியைகள் ஒரே ஒரு கூட்டத்தில். அது உண்மை. அதை யோசித்துப் பாருங்கள். அவைகளை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். அவை நிகழ்வதை நாம் கண்டிருக்கிறோம். அவை முன்னுரைக்கப்பட்டு நிறைவேறுவதை நாம் கவனித்திருக்கிறோம். குருடர்கள் சப்பாணிகள், சூம்பின கையுடையவர்கள். காரியங்கள் முன்னுரைக்கப்பட்டு பிழையின்றி நிறைவேறியுள்ளன. அவை ஒருபோதும் நிறைவேறத் தவறினதில்லை. சகோதரனே, அது நம்மை தாழ்மையோடும் பயபக்தியோடும் செயல்பட தூண்ட வேண்டும். வேதாகம நாட்களில் அக்கினி ஸ்தம்பம் இஸ்ரவேல் ஜனங்களின் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அதன்பிறகு அது மாம்சமாகி நமது மத்தியில் வாசம் செய்த... ''நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன். பரி. பவுல் அதை கண்டு முகங்குப்புற தரையில் விழுந்தான். கமாலியேலிடம் பயின்ற பெரிய ஆசிரியனாகிய பவுல் மண்ணில் புரண்டு, “ஆண்டவரே, ஆண்டவரே, நீர் யார்? நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்'' என்றான். பெரிய மேதை, அறிவாளி. அவன் தன்னைத் தாழ்த்தினான். ஏனெனில் அவன் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டான். அது நமது மத்தியில் நகர்ந்து கொண்டிருப்பதை நமது கண்களால் நாம் காண்பது மாத்திரமல்ல, அது விஞ்ஞான ரீதியாய் நமக்கு நிரூபிக்கப்பட்டள்ளது. அது நம்மை செயல்படச் செய்ய வேண்டும். அது முன் காலத்தில் செய்தவைகளையே இப்பொழுதும் செய்வதை நாம் காண்கிறோம். இன்றைக்கும் அது செய்ய வருகிறது. பிதாவின் வாக்குத்தத்தம். அது என்ன? வார்த்தையை உறுதிப்படுத்த, வார்த்தையை நிரூபிக்க அது வந்துள்ளது. அது சபையை செயல்படச் செய்ய வேண்டும். இல்லையா? 94 இரண்டு செட்டைகளினால் அவன் பயபக்தியோடு தன் முகத்தை மூடினான். இரண்டு செட்டைகளினால் அவன் தாழ்மையோடு தன் கால்களை மூடினான். மற்ற இரண்டு செட்டைகளினால் அவன் பறந்து சென்று அதை செயலுக்குட்படுத்தினான். இப்பொழுது நாம் வார்த்தையின் விஷயத்தில் செயல்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் ஜனங்களுக்கு அதை அறிவிக்க வேண்டும். அவருடைய வருகையின் அடையாளங்கள் தோன்றுகின்றன. அது வார்த்தையில் கூறப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் கூறின சில காரியங்கள் இப்பொழுது நிகழவிருக்கின்றன. 95 ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே கட்டிடத்தில், கென்னடி ஜனாதிபதியாக வருவதை அது முன்னுரைத்ததது. எப்படி பெண்கள் இந்த ஆளை உள்ளே கொண்டு வருவார்கள் என்றும், அவர் எப்படி இருப்பாரென்றும், அது அப்படியே முன்னுரைத்தது. நாம் அதை அறிந்து, என்ன நடக்குமென்று முன்னுரைத்தோம். இதோ அது நடந்து விட்டது. எல்லா சபைகளும் ஒன்று சேர்ந்து சபைகளின் சங்கம் வந்து கொண்டிருக்கிறது. அது ஏன் நம்மை செயல்படுத்தத் தூண்டுவதில்லை? அது உண்மை. உ, ஊ, அவர் உரைத்தது வார்த்தைக்கு வார்த்தை நமக்கு முன்னால் நிறைவேறி வருகிறது. அது நம்மை செயல்படச் செய்ய வேண்டும். தீர்க்கதரிசி கண்டதுபோல, நாமும் ஸ்தாபனங்கள் உருவாகி, அவைகள் தங்களை உயர்த்திக் கொண்டதன் காரணமாக, தங்கள் ஸ்தானங்களை இழந்துவிட்டதை நாம் காண்கிறோம். 96 ஏசாயா அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் தொடக்கத்தில் ஸ்தாபனத்தைச் சேர்ந்த மனிதனாயிருந்தான். ராஜா நல்லவன் என்பதால் அவன் அவன் பேரில் சார்ந்திருந்தான். ஆனால் ராஜா தன்னை உயர்த்திக் கொண்டதனால் சபைக்கு உண்டான விளைவை நாம் காண்கிறோம். அது சபை என்று தன்னை அழைத்தக் கொள்ளுகின்ற இந்த ஸ்தாபனங்களை அறவே அகற்றிவிட்டது. ஒரு ஸ்தாபனம் விழுந்து போன பின்பு அது மறுபடியும் உயிர் பெற்றதை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். அப்படி உயிர் பெற்ற ஸ்தாபனம் எங்குள்ளது? நீங்கள் சபை வரலாற்றை படித்து, விழுந்து போன சபைகளைக் காணுங்கள். அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட உடனே விழுந்து போய் மறுபடியும் உயிர் பெறவில்லை. உசியா மறுபடியும் தேவாலயத்துக்கு வரவேயில்லை. அவன் மீதியான தன் நாட்களில் குஷ்டரோகியாயிருந்து, குஷ்டரோகியாக அடக்கம் பண்ணப்பட்டான். ஆம், ஐயா! 97 தீர்க்கதரிசி, உயர்த்திக் கொள்வதனால் உண்டாகும் விளைவைக் கண்டான். ''நாங்கள்...'', ''ஏறக்குறைய எல்லோருமே... அறிவுப்புலன் சரியாயுள்ளதா என்று மனோதத்துவ நிபுணர் பரிசோதிக்காமல் யாருமே எங்கள் ஸ்தாபனங்களில் போதகராக முடியாது. எங்களிடம் பேச வருவதற்கு முன்பு அவர் டாக்டர் பட்டங்களை பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்கள் குழு அவரை ஏற்றுக் கொள்ளாது“. ''ஓ, என்னே!'' நகரத்தில் மிகப் பிரபலமானவர்கள் எங்கள் சபைக்கு வருகின்றனர். வெளியில் நிற்கும் விலையுயர்ந்த கார்களைப் பாருங்கள் காலடிலாக், ரிக்கன் பாக்கர் போன்றவை. இது சாகிறதை நாம் கண்டிருக்கிறோம். அது செத்து, முழுவதுமே; வேதம் கூறுவது போல் நொதிக்கின்ற இரணமாயுள்ளது. அது முழுவதுமே இரணமாயுள்ளது. அது துர்நாற்றம் எடுக்கின்றது. அது உண்மை. (நான் ஆவிக்குரிய துர்நாற்றத்தைக் கூறுகிறேன். பாருங்கள்?). 98 அவர்கள் தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள தங்கள் பிடியை தளர்த்தி, கோட்பாடுகளை உயர்த்துவதை நாம் காண்கிறோம். அதனால் ஏற்படும் விளைவு என்ன? அவிசுவாசம் என்னும் குஷ்டரோகத்தினால் தாக்கப்படுதல். ஊ, ஓ, என்னே! அபிஷேகம் பெற்றவன் செய்ய வேண்டிய வேலையை உசியா செய்ய முனைந்து அவனுடைய இடத்தை எடுத்துக் கொள்ள முயன்றதுபோல். அவன் குஷ்டரோகத்தினால் தாக்கப்பட்ட பின்பு, அவன் அதை செய்யக்கூடாது என்பதை உணர்ந்தான். இன்று சபைகள் தேவனுடைய வசனத்தை பிரசங்கிக்க வேண்டிய அபிஷேகம் பெற்றவரின் உத்தியோகத்தை எடுத்துக் கொண்டு, அதன் விளைவாக குழப்பத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கு வார்த்தையை எடுத்துக் காண்பித்தால், என்ன செய்வதென்று தெரியவில்லை. அது பயங்கரமான நிலை. அது வேறொரு காலத்திற்குரியது என்கின்றனர். அது என்ன? அவர்கள் குழப்பமுற்றுள்ளனர். தேவனால் அபிஷேகம் பெற்ற உத்தயோகத்தை வகித்துக் கொண்டு, வார்த்தையின் உருவில் இருக்கின்ற அவராகிய, அவருடைய அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையை நீங்கள் எப்படி மறுதலிக்க முடியும்? அது வார்த்தை உண்மையென்பதை நீங்கள் மறுதலித்து, அதே சமயத்தில் நீங்கள் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளதாக எப்படி கூற முடியும்? தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றே ஒன்று பரிசுத்த ஆவியே. “பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார். அது உண்மை. நீங்கள் அபிஷேகம் பெற்ற உத்தியோகத்தை வகித்துக் கொண்டு எப்படி கோட்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் சார்ந்திருக்க முடியும்? அவை மரித்துவிட்டன செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், சாஷ்டாங்கமாக விழுந்து, ”தேவனாகிய கர்த்தாவே . நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன் என்று கதறுவதே. ஆம், ஐயா! 99 இந்த ஸ்தாபனங்கள் பரிசுத்த சபையின் இடத்தை எடுத்துக் கொள்ள பார்க்கின்றன. “வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்”. அவருடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கறேன். நான் ரோமன் கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன் போன்றவை. “மரித்த பரிசுத்தவான்கள் வேண்டிக் கொள்வதை நான் விசுவாசிக்கிறேன்''. நான் கிறிஸ்து வேண்டிக் கொள்வதை விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா மரித்த பரிசுத்தவான்கள் மகிமையில்உள்ளனர் என்று நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக. தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா அப்படிப்பட்ட காரியங்களை நுழைக்கின்றனர். வேதம் அதற்கு எதிராயுள்ளது. அவர்கள் “அது வேதம் என்கின்றனர். ஆனால் வேதம் தேவன். வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். இப்பொழுது வார்த்தை நமது மாம்சத்தில் இருந்து கொண்டு பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, தன்னை வெளிப்படுத்துகிறதாயுள்ளது. செயல்பட இதுவே நேரம். அது உண்மை. 100 தீர்க்கதரிசி தரிசனத்தைக் கண்டதால் உண்டான விளைவு (ஓ, என்னே!). அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி, தான் பாவியென்று அறிக்கை செய்ய அது காரணமாயிருந்தது. அவன், “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். நான் தவறு செய்திருக்கிறேன். நானே அசுத்தன் என்கிறான். அவன் ஒரு பாவி. அவன் தன் பாவங்களை அறிக்கை செய்தான். ஆம், ஐயா! தேவனுடைய தீர்க்கதரிசி தான் பாவி என்று அறிக்கையிடும்படி செய்தது. அதுதான் அந்த தரிசனம் செய்தது. டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அதை கண்டு கேலி செய்வார்கள். அவர்கள் சபையில் குருக்களாட்சியுடைவர்களாக கருதப்படுபவர்கள். வானொலி செய்தியில் அந்த கத்தோலிக்க கார்டினல் கூறினதைக் கேட்டீர்களா? அவர், ''கர்த்தர் சீக்கிரம் வரப்போவதாக சிலர் போதிக்கின்றனர். அப்படிபட்ட குழுவை நாம் ஒழித்து விட்டு, உலக மார்க்க சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றார்“. ஜனங்களே இந்நேரத்தில் தூங்கிவிடாதீர்கள். அது நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அருகில் உள்ளது. உங்களுக்கு தெரியுமா, இந்த ஆள் யோசேப்பை அறியாத ஒருவனைப் போல இவரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 101 கவனியுங்கள், அது மிகவும் தந்திரமாக உள்ளே நுழைந்துவிட்டது. கடைசியாக அவர்கள் ஆதிக்கம் பெற்று, சபைகளின் சங்கம் உருவாக்குவதன் மூலம் மிருகத்துக்கு ஒரு சொரூபம் உண்டாக்கி மிருகம் பேசுவதையே பேசும்படி செய்வார்கள். அது தேவனுடைய ஜனங்களை துன்புறுத்துவதற்கு அதற்கு அதிகாரம் கொடுத்து, தேவனுடைய காலங்களையும் பிரமாணங்களையும் மாற்றிப் போடும். வேதம் கூறியுள்ளதை அது அப்படியே செய்யும். அதற்கு நாம் பின்னே வருவோம். இன்றிரவு அதிக நேரமாகிவிட்டது. உங்களுக்கு அது தெரியும். ஆம், ஐயா! அவன் பாவியென்று அறிக்கை செய்ய அது காரணமாயிருந்தது. ஆனால் இன்றைக்கு அது நடக்குமானால் அவர்கள், ''நான் டாக்டர் இன்னார், இன்னார்“, என்பார்கள். ஒரு பேராயர் இவ்வாறு கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ''நான் பரலோகத்தக்கு செல்லும் போது என்ன செய்வேன் தெரியுமா?நான் இயேசுவிடம் சென்று, நான் யார் தெரியுமா? நான் தான் பேராயர் இன்னார், இன்னார், என்பேன்“. அப்பொழுது அவர், “என் தாய் உன்னைக் குறித்து என்னிடம் கூறியிருக்கிறார்கள்” என்பார் என்றார். அவர், ''வேதத்தை விசுவாசிப்பவர்கள் சேற்றில் நடந்து செல்பவர்களுக்கு ஒப்பானவர்கள். அவர்கள் போகுமிடம் அவர்களுக்குத் தெரியாது'' என்றார். 102 அப்படி நினைக்கவே நினைக்காதீர்கள். அவர் என் வழிகாட்டி (நாளை இரவு அதன் பேரில் பேசுவேன். ஆம், ஐயா அவர் உங்களை சேற்றின் வழியாகவும், ஆபத்தான மீன் கூட்டங்களின் வழியாகவும்) உயர்ந்த இடங்கள், தாழ்ந்த இடங்கள் இவற்றின் வழியாகவும் நடத்திச் செல்வார். அது எதுவாயிருந்தாலும் அவர் மரண ஆற்றின் வழியாக என்னை நடத்திச் செல்வார். ஆமென்! ஓ, ஆம், ஐயா அவர் வழி நடத்துவார். “மரணம் வரும்போது, பொல்லாப்புக்கு பயப்படேன். நீர் என்னோடு கூட இருக்கிறீர். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்கு பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்”. ''நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துக் செட்டைகளை எடுத்து பறந்தாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர். அவர் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறார், நான் அசைக்கப்படுவதில்லை'' என்று தாவீது கூறினான். ஆமென்! ஓ, என்னே! நீங்கள் செட்டைகளை எடுத்து பறந்து இப்பொழுதே செயல்படுங்கள். ஆம், ஐயா! இந்த தீர்க்கதரிசி உடனே செயல்பட்டான். அவன் முழங்கால்படியிட்டான். அவன், ''நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன் என்றான்“. அவன் அறிக்கையிட்டவுடனே சுத்திகரிப்பு வருகிறது. நீங்கள் முதலில் அறிக்கை செய்ய வேண்டும். 103 நீங்கள் கவனிக்க விரும்புகிறேன், அந்த தீர்க்கதரிசி... இதை யோசித்து பாருங்கள்... அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றிருந்த மனிதன், உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி , முதன் முறையாக கண்டவுடனே... அதற்கு முன்பு அவன் தரிசனம் கண்டதில்லை. அவன் வேறு விதமாக வழி நடத்தப்பட்டான். அவன் தேவனுடைய வழி நடத்துதலை உணர்ந்து, வார்த்தையின்படி சென்றான். ஆனால் இம்முறை அவன் தரிசனம் கண்டு, “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், இந்த ஜனங்களெல்லாம் அசுத்தமுள்ளவர்கள். ஐயோ அதமானேன். ஏனெனில் நான் கர்த்தருடைய மகிமையைக் காண்கிறேன்'' என்று உரக்க சத்தமிட்டான். நாம் ஒன்றும் செய்யாமல் அதை கண்டு கொண்டிருக்கிறோம். நாம் பறந்து செல்ல வேண்டும். பாருங்கள், பாருங்கள்? 104 ''நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்“. அவன் பீடத்தருகில் சென்று, ''ஆண்டவனே, நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். நான் என்ன செய்வேன். நான் என்ன செய்வேன். நீர் அங்குள்ளதை நான் கண்டுவிட்டேன் தூதன் அதை அசைப்பதைக் கண்டேன். அவன் பேசுவதை கண்டேன், அப்பொழுது அது அசைந்தது” என்றான். ஆமென்! (நீங்கள் தூங்கவில்லை என்று நம்புகிறேன்). ஓ, என்னே! பேசினால் ஒன்று நடக்கிறது. மகிமை! என்ன நடந்தது? அவன் பாவத்தை அறிக்கை செய்தான் என்று காண்கிறோம்... அவன் அறிக்கை செய்தவுடனே, உரத்த சத்தமாய் துதித்துக் கொண்டிருந்த தூதன், தன் கையில் குறட்டை எடுத்து தன் கையிலே பிடித்த குறட்டால் நெருப்புத் தழலை எடுத்து பறந்து வந்து ஏசாயாவின் உதடுகளைத் தொட்டு, அவனை சுத்திகரித்தான். 105 கவனியுங்கள், டாக்டர் பட்டம் பெற தூதன் அவனை அனுப்பவில்லை. அல்லது அவனுக்கு படிக்க பிரமாணப் புத்தகம் ஒன்றைக் கொடுக்கிவில்லை. தேவன் தீர்க்கதரிசிக்கு, அவருடைய சுத்திகரிக்கும் வல்லமை பலி பீடத்திலுள்ள நெருப்பில் தான் உள்ளது என்று காண்பித்தார். ஆமென்! இன்று தேவனின் சுத்திகரிக்கும் வல்லமை கோட்பாடுகளை உச்சரிப்பதனாலோ அல்லது சபையில் சேர்வதனாலோ இல்லை. அது கீழே இறங்கி வந்து, ஒரு மனிதனை அவனுடைய எல்லா அவிசுவாசத்தினின்றும் சுத்திகரிக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையும் அக்கினியுமாம். ஆமென்! ஒரு தீர்க்கதரிசியை சுத்திகரிக்கும் தேவனுடைய வழி நெருப்பின் மூலமே. கோட்பாட்டின் மூலம் அல்ல. ஒரு தீர்க்கதரிசிக்கு கோட்பாட்டைக் குறித்து என்ன தெரியும்? அவன் தேவனால் உபயோகிக்கப்படப் போகிறவன். வார்த்தை அவன் மூலம் வெளிப்படவிருப்பதனால், அவர் அவனுக்கு கோட்பாட்டை கொடுக்க முடியாது. அப்படி செய்தால் அவன் கோட்பாட்டை இறுகப் பற்றிக் கொள்வான். எனவே தூதன் பலிபீடத்திலிருந்த நெருப்பை எடுத்து தீர்க்கதரிசியை சுத்திகரித்தான். 106 முதலில் பாவ அறிக்கை, அதன் பிறகு நெருப்பினால் சுத்திகரிக்கப்படுதல். தேவனுக்கு மகிமை! ஓ, கவனியுங்கள் முதலில் பாவ அறிக்கை செய்தல், இரண்டாவது சுத்திகரிக்கப்படுதல், மூன்றாவது கட்டளை பெறுதல். ஆமென் பார்த்தீர்களா? முதலில், “நான் தவறு செய்துவிட்டேன்'' என்று அறிக்கை செய்தல். இரண்டாவது, சுத்திகரிக்கப்படுதல், நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். பாருங்கள்? அறிக்கை செய்தல், சுத்திகரிக்கப்படுதல், கட்டளை பெறுதல். ”நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்.'' ஆமென்! அறிக்கை செய்த பிறகு சுத்திகரிப்பு வருகிறது. சுத்திகரிப்புக்குப் பிறகு கட்டளை பிறக்கிறது. சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்துங்கள். ஜனங்கள் என்ன கூறின போதிலும்... முடிவில் அந்த விலையேறப்பெற்ற தீர்க்கதரிசி துன்புறுத்தப்பட்டு, வாளால் துண்டு துண்டாக அறுப்புண்டு மரித்தான். 107 ஞாபகம் கொள்ளுங்கள், ஏசாயா அவன் தவறென்று அறிக்கை செய்த போது தான்; அவன் முழுவதும் தவறாயிருந்தான். அவன் தன் கோட்பாட்டின் மேல் சார்ந்திருந்தான் (பாருங்கள்?) அவன் ஒரு மனிதன் மேல், மனிதனால் உண்டாக்கப்பட்ட விவகாரத்தின் மேல் சார்ந்திருந்தான். அவன் பெரியவனாயிருந்த ஒரு ராஜாவைக் கண்டான். அந்த ராஜா பக்தியுள்ளவன். ஆனால் எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்கள் என்று அவன் அறிந்து கொண்டான். பாருங்கள்? அவன் தன் போக்கை மாற்றிக் கொண்டு, மேலே நோக்கி தரிசனம் கண்டு தேவன் யாரென்று கண்டுகொண்ட போது, அவன், “நான் தவறு செய்தேன் என்று அறிக்கையிட விரும்புகிறேன். அந்த கோட்பாடுகள் ஒருபோதும் கிரியை செய்யாது. ஏனெனில் அவை தவறிப்போய் செத்துவிட்டன (பாருங்கள்?) அவைகளுக்கு குஷ்டரோகம் பிடித்துள்ளது. ஆனால் நான் தேவனுடைய மகிமை வெளிப்பட்டதைக் கண்டேன்'' என்றான். கோட்பாடுகள் அதை வெளிப்படுத்த முடியாது. கோட்பாடுகள் அவ்விதம் உரைக்க முடியாது. கோட்பாடுகள் அவ்விதம் செய்ய முடியாது. கிறிஸ்து மாத்திரமே அவ்விதம் செய்ய முடியும். அவன் அதை கண்டவுடனே, ''கர்த்தாவே, நான் முழுவதும் தவறாயிருந்தேன் என்று அறிக்கையிட்டான். அதன் பிறகு சுத்திகரிப்பு வந்தது. சுத்திகரிப்புக்கு பிறகு கட்டளை பிறந்தது. ஓ, என்னே! அப்பொழுது தான் சுத்திகரிக்கப்பட்ட அந்த ஏசாயா... கர்த்தர், யார் நமது காரியமாகப் போவான்? என்று கேட்ட போது, ஏசாயா, இதோ, “அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்'' என்றான். சுத்திகரிக்கப்பட்ட தீர்க்கதரிசி. 108 ஓ, அந்த பாதிப்பை உங்களால் காண முடியவில்லையா? மார்தெலாவினால் பாதிக்கப்படாதீர்கள் (அந்த பெயருடையவர் இங்கு யாருமில்லை என்று நம்புகிறேன்). உன்னுடன் பள்ளிக்கு செல்லும் பெண்ணின் வாழ்க்கையினாலோ, அல்லது தலைமயிர் கர்த்தரித்து குட்டை கால் சட்டை அணிந்துள்ள அடுத்த வீட்டுப் பெண்ணினாலோ பாதிக்கப்பட வேண்டாம். தேவனுடைய மகிமையை காணும் வரைக்கும் அங்கு நின்று, அதன் விளைவாக ஏதாவதொன்று அசைவதை கண்டு, தேவன் கூறின விதமாகவே நடப்பதை பார். அதன் பிறகு, “ஐயோ அதமானேன். ஆண்டவரே, நான் தவறு செய்து வந்தேன். கர்த்தாவே, என்னை சுத்திகரியும். ஜீவனுள்ள தேவனின் ஆவியே, என் மேல் புதிதாக விழும்” என்று உரக்க சத்தமிடு. நெருப்புத் தழல் தீர்க்கதரிசியை தொட்டு அவனை முழுவதும் சுத்திகரித்த பின்பு ''யார் நமது காரியமாகப் போவான்?'' என்று தேவனுடைய சத்தம் கேட்ட போது, அவன், “இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்'' என்றான். (அவன் ஆயத்தமாயிருந்தான். அவன் எதோ ஒன்றைக் கண்டான். ஆம், ஐயா ) லட்சக்கணக்கானோர் இப்பொழுது பாவத்திலும் அவமானத்திலும் மடிந்து கொண்டிருக்கின்றனர் அவர்களுடைய விசனமான கசப்பான கூக்குரலைக் கேள் சகோதரனே, விரைந்து செல், அவர்களைக் காப்பாற்ற விரைந்து செல் விரைவாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்று பதில் கொடு. 109 ஏதாவதொன்றை செய்தாக வேண்டும். நாம் நினைப்பதைக் காட்டிலும் கால தாமதமாகிவிட்டது. தேவனுடைய தரிசனம் ஜனங்களில் பாதிப்பை உண்டு பண்ணி, ஏசாயாவுடன் தேவாலயத்தில் இருந்த அதே தேவன் இன்று தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்பதை அவர்கள் காண்பார்களாக. அவர் பரிசுத்த ஆவியின் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார். அவர் பரிசுத்த ஆவி. அவர் ஒரு காலத்தில் மாம்சத்தில் இருந்தார். இப்பொழுது அவர் பரிசுத்த ஆவியாக ஜனங்களின் மத்தியில் அசைவாடி, தம்மை ஜீவனுள்ளவராக நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக காண்பித்துக் கொண்டிருக்கிறார். ஓ, ஏசாயாவே, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன், என்னை அனுப்பும் என்று விரைவாக பதில் கொடு”. ஜெபம் செய்வோம். நாம் தலைவணங்கினவர்களாய்... நெருப்புத் தழல் தீர்க்கதரிசியை தொட்டு அவனை முழுவதும் சுத்திகரித்த பின்பு ''யார் நமது காரியமாகப் போவான்?“ என்று தேவனுடைய சத்தம் கேட்ட போது, அவன், “இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றான். (எல்லோரும் ஒன்று சேர்ந்து). என் கர்த்தாவே, பேசும், என் கர்த்தாவே பேசும், பேசும், நான் விரைவாக பதிலளிப்பேன் என் கர்த்தாவே, பேசும், என் கர்த்தாவே பேசும், பேசும், ''கர்த்தாவே என்னை அனுப்பும்“ என்று பதிலளிப்பேன் 110 ஒருக்கால் அது உங்கள் அடுத்த வீட்டுக்காரராய் இருக்கலாம், அல்லது உங்களுடன் வேலை செய்யும் பெண்ணாக இருக்கலாம். ஆனால் அவர்கள்... லட்சக்கணக்கானோர் இப்பொழுது பாவத்திலும், அவமானத்திலும் மடிந்து கொண்டிருக்கின்றனர்; (கோட்பாடுகளிலும் ஸ்தாபனங்களிலும்). அவர்களுடைய விசனமான கசப்பான கூக்குரலைக் கேள் சகோதரனே, விரைந்து செல், அவர்களைக் காப்பாற்ற விரைந்து செல் விரைவாக, ''ஆண்டவரே, இதோ இருக்கிறேன்“ என்று பதில்கொடு. என் கர்த்தாவே, பேசும், என் கர்த்தாவே, பேசும் (நான் தேவனிடத்திலிருந்து உண்டான தரிசனத்தைக் கண்டேன்) பேசும், நான் விரைவாக பதிலளிப்பேன் என் கர்த்தாவே, பேசும், என் கர்த்தாவே பேசும், பேசும், “கர்த்தாவே என்னை அனுப்பும்” என்று பதிலளிப்பேன். 111 இப்பொழுது உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் போது இன்றிரவு யாராகிலும்; நான் உங்களிடம் கூறினது போல், நான் வந்து கொண்டிருக்கும் போது, உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நான் எண்ணின் ஒன்றைப் படிக்க முயன்றேன். அந்த தீர்க்கதரிசியை நீங்கள் கண்டீர்கள். அவன் பெரியவன். தீர்க்கதரிசியாயிருக்கவே அவன் பிறந்தவன். அவன் தவறான பாதையில் சென்றதை அறிந்து கொண்டான். அவன் ராஜாவாகிய உசியாவின் மேல் சார்ந்திருந்தான். மாம்சமானவரின் மேல் சார்ந்திருக்கக் கூடாது, அழிந்து போகக்கூடாது, அது தவறென்று அவன் கண்டு கொண்டான். அவன் அண்ணாந்து பார்த்து தேவன் தமது சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கண்டான். அவன் இயேசுவை அங்கு கண்டான். அவர், ''நான் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறேன்“ என்றார். நீங்கள் ஆவிக்குள்ளாகுங்கள். அப்பொழுது அவர் என்றென்றும் மாறாதவர்தானா என்பதை அறிந்து கொள்வீர்கள். 112 கர்த்தருடைய தரிசனம் இறங்கி அந்த தேவாலயத்துக்குள் வருவதை ஏசாயா கண்ட போது, அவனுடைய தவறுகளை அவன் அறிக்கையிட ஆயத்தமானான். அவன் சரியான எதையுமே செய்யவில்லை என்று அறிக்கையிட ஆயத்தமானான். அப்பொழுது அவன் தேசத்துக்கு பறந்து சென்றான். அதன் பிறகு சரியான எல்லாவற்றையும் அவன் செய்தான். அவனால் இயன்ற எல்லாவற்றையும் அவன் செய்து, முடிவில் அவன் சாட்சியை அவனுடைய இரத்தத்தினால் முத்தரித்தான். நம்மெல்லாருக்கும் அத்தகைய உணர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களில் எத்தனை பேர் தேவன் அழைப்பதைக் கேட்டு, 'இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்'' என்று சொல்ல விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்களையுயர்த்துங்கள். ''இதோ அடியேன் இருக்கிறேன். நான் பால்காரனிடம் சாட்சி கூறட்டும். கர்த்தாவே, நான் ஏதாவதொன்றைச் செய்வேனாக. நான் போதகராக வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் கர்த்தாவே, நான் விவசாசியாக இருந்தால், எனக்கு பக்கத்திலுள்ள விவசாயினிடம் நான் சாட்சி கூறும்படி செய்வீராக. நான் தானியத்தை விற்கும் போது, தானியம் வாங்குபவரிடம் சாட்சி கூறும் விவசாயியாக என்னை மாற்றுவீராக. நான் பெண்ணாக இருந்தால், காப்பீடு செய்யும் மனிதனிடம் சாட்சி கூறட்டும் நான் பால்காரனிடம் சாட்சி கூறட்டும், செய்தித்தாளைக் கொண்டு வரும் பையனிடம் சாட்சி கூறட்டும். கர்த்தாவே, நான் எதாவதொன்றை செய்யட்டும். நான் பக்கத்து வீட்டுக்குச் சென்று, பொல்லாப்பும் தவறும் செய்கிற அந்த சகோதரியின் கண்களில் எனக்கு தயவு கிடைக்கும்படி செய்யும். என் சாட்சியை நான் இனிமையோடு அவளிடம் கூறட்டும். தாழ்மை என்னும் செட்டைகளினால் என் முகத்தை மூடிக் கொள்வேனாக. அவ்வாறே என் கால்களையும் நான் மூடிக் கொள்ளட்டும். உமது சமுகத்தில் நான் பயபக்தியாய் இருக்கச் செய்யும். கர்த்தாவே, இன்னும் இரண்டு செட்டைகளுடன் என்னை வேகமாக யாரிடமாவது அனுப்புவீராக. இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்''. 113 இதே மரியாதையுடன் நாம் எல்லோரும் எழுந்து நின்று நம்மை தேவனுடைய ஊழியத்துக்கென்று பிரதிஷ்டை செய்வோம். சர்வ வல்லவர் இங்கிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் தேவனுடைய தெய்வீக சமூகத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிடாதீர்கள். அவருடைய சமூகம் இப்பொழுது இங்குள்ளது. வெளிப்படையாகக் கூறினால், இங்கு நின்று கொண்டிருக்கும் நேரத்தில், நான் ஏற்கனவே நான்கைந்து தரிசனங்களைக் கண்டுவிட்டேன். அது உண்மை. அது உண்மை. இந்த சபையைச் சேர்ந்து இரண்டு மூன்று பேர் ஒன்றுமே கூறுவில்லை. ஆனால் அது தரிசனத்தில் காணப்பட்டது. சரி. இப்பொழுது, நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில், நம்மை தேவனுக்கு பிரதிஷ்டை செய்து கொள்வோம். அவருடைய ஆசீர்வாதமான வருகையின் அடையாளத்தை காண்கிறோம் இதோ, அத்தி இலைகள் பசுமையாகின்றதைப் பாருங்கள் ராஜ்யத்தின் சுவிசேஷம் ஒவ்வொரு தேசத்துக்கும் சென்றுவிட்டது. நாம் அருகில் இருக்கிறோம், முடிவு கண்களுக்கு தெரிகிறது (அது உண்மை. இல்லையா?) அப்படியானால் அவருடைய ஆசீர்வாதமான வருகையின் செய்தியை பறைசாற்றுவோம் நம்மெல்லாருக்கும் தெரிவிக்க அவர் விரைவில் மகிமையில் வருகிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, விழித்தெழுங்கள் முடிவு நெருங்கும் போது ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள் அந்த கடைசி அழைப்புக்கு நாம் ஆயத்தமாவோம் (ஆமென்!) நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழுகிறாள் (அவள் இப்பொழுது ஒரு தேசமாகிவிட்டாள்) இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம் புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன திகில் எங்கும் சூழ்ந்துள்ளது (அது வருவதை நீங்கள் காணலாம்,தேசங்களில் மாத்திரமல்ல, சபைகளிலும் கூட) ஓ, சிதறப்பட்டவர்களே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள் மீட்பின் நாள் நெருங்குகிறது மனிதரின் இருதயம் பயத்தினால் சோர்ந்து போகிறது அவருடைய ஆவியினால் நிறைந்து உங்கள் தீவட்டிகளை சுத்தம் பண்ணி மேலே நோக்குங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் கிறிஸ்து இயேசுவே நமது தேவன் என்னும் தேவனுடைய சத்தியத்தை மறுதலிக்கின்றனர் (அவர்கள் அப்படி செய்கிறார்களென்று உங்களுக்குத் தெரியும்) நாமோ அப்போஸ்தலர் சென்ற பாதையில் நடப்போம் ஏனெனில் மீட்பின் நாள் நெருங்குகிறது மனிதரின் இருதயம் பயத்தினால் சோர்ந்து போகிறது அவருடைய ஆவியினால் நிறைந்து உங்கள் தீவட்டிகளை சுத்தம் பண்ணி மேலே நோக்குங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. 114 ஸ்தாபன புகையை துடைத்துவிடுங்கள். உலக அழுக்கை துடைத்துவிடுங்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்களை சுத்திகரிக்க போதுமானதாயுள்ளது. மேலே நோக்கிப் பாருங்கள்! உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும். அந்த செட்டைகளை எடுத்துக் கொண்டு உடனே யாரிடமாவது பறந்து செல்லுங்கள். இப்பொழுது நாம் கரங்களையுயர்த்தி, தேவனே, “இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்” என்று சொல்வோம். 115 பரலோகப் பிதாவே, இந்த கடுமையான கண்டிப்பான செய்திக்கு பிறகு என்னையும் கர்த்தாவே, இந்த சபையுடன் கூட இன்றிரவு பிரதிஷ்டை செய்து கொண்டு, “இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்'' என்று கூறுகிறேன். இதோ என் சபை, கர்த்தாவே. அவர்கள் பயபக்தியுடன் தங்கள் முகத்தை மூடிக் கொள்வார்களாக. அவர்கள் தாழ்மையுடன் தங்கள் கால்களை மூடிக் கொள்வார்களாக. இந்த செய்தியுடன் விரைவாக யாரிடமாவது பறந்து செல்ல அவர்கள் போதிய தைரியம் பெற்றிருப்பார்களாக. கர்த்தாவே, இதை அருளும். அவர்கள் இனிமையாக சாட்சி கூறி, பூமிக்கு சாரமுள்ள உப்பாயிருப்பார்களாக. கர்த்தராகிய தேவனே, இதுவே எங்கள் பலி, இதுவே எங்கள் காணிக்கை, இதுவே எங்கள் நன்றி. கர்த்தாவே இதைத்தான் நாங்கள் வாஞ்சிக்கிறோம். இழந்து போன நிலையிலுள்ள யாரிடமாவது இன்றிரவு எங்களை அனுப்பும். அவர்களை நாங்கள் நாளை சபைக்குள் எங்கிருந்தாவது இழுத்துக் கொள்வோமாக. அவர்களுக்கு கர்த்தரின் வழியை நாங்கள் போதிக்கட்டும். கர்த்தாவே, அவர்கள் இரட்சிக்கப்படுவார்களாக. ஏனெனில் நாங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. கர்த்தாவே, இதை அருளும். 116 கர்த்தாவே, இதை நாங்கள் உண்மையாக எங்கள் இருதயங்களில் உணர்ந்து கூறுவோமாக. கர்த்தாவே, இதை நாங்கள் உரைக்கும் போது, கல்வாரி என்னும் பலிபீடத்திலிருந்து பரிசுத்த ஆவி என்னும் நெருப்புத் தழலை எடுத்து. இன்றிரவு எங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்தையும் உதடுகளையும் தொட்டு, நாங்கள் பொய் பேசாதபடி உண்மையே பேசும்படி செய்யும். கர்த்தாவே, நாங்கள் இருக்கும் வண்ணமாகவே எங்களை எடுத்து உபயோகியும். நாங்கள் எல்லோருமே போதகர் அல்ல. நாங்கள் எல்லோருமே தீர்க்கதரிசிகள் அல்ல. நாங்கள் எல்லோருமே அந்நிய பாஷை பேசுகிறவர்கள் அல்ல. நாங்கள் எல்லோருமே அற்புதங்களைச் செய்கிறவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் எல்லோருமே செய்வதற்கு ஏதாவதொன்றுண்டு. கர்த்தாவே, அது எங்குள்ளது என்பதைக் காண்பியும். நாங்கள் சாட்சி கூறி உமது துதியைப் பாடுவோமாக. தண்ணீர்களின் மேல் போடப்படும் ஆகாரத்தைப் போல், அது மகிமையுள்ள ஒரு நாளில் திரும்பி வரும். கர்த்தாவே, இதை அருளும். இதோ நாங்கள் இருக்கிறோம். எங்களை எங்கள் அடுத்த வீட்டுக்காரரிடம், எங்கள் தோழர்களிடம், எங்கெல்லாம் செல்ல முடியுமோ, அங்கெல்லாம் எங்களை அனுப்பி, அவர்களிடம் கர்த்தருடைய வருகையைக் குறித்து எடுத்துரைக்கும்படி செய்வீராக. பிதாவே, இதை அருளும். 117 இப்பொழுது எங்களை ஆசீர்வதிப்பீராக. இன்றிரவு எங்கள் சரீரங்களுக்கு நல்ல இளைப்பாறுதலைக் கட்டளையிடும். நாளை காலை எழுந்து ஆராதனைக்கு வர அருள் புரியும். நாளை நீர் வல்லமையாக பேசி, ஒருவரையும் நீர் விடாமல், இதற்குள் எப்படி பிரவேசிப்பது என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ளும்படி செய்யும். கர்த்தாவே, எங்களுக்கு போதியும். நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்க இந்த முழு நிறைவுக்கு எப்படி வருவதென்று நாளை காலை எங்களுக்கு போதியும். நெருப்புத்தழல் எங்கள் உதடுகளைத் தொடுவதற்காக ஆயத்தமாயிருக்கும் இவ்வேளையில், கர்த்தாவே, நாங்கள் உம்மிடம் காத்திருக்கிறோம். பிதாவே, நாங்கள் காத்திருக்கிறோம். இயேசுவின் நாமத்தில் 118 நாம் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில், போதகர் முன்னால் வந்து ஆராதனையை முடிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாளை காலை உங்களைக் காண்பேன் என நம்புகிறேன். தேவன் உங்களோடு கூட இருந்து, நமது மத்தியிலுள்ள பிணியாளிகளையும் ஊனமுற்றவர்களையும் சுகமாக்கி, உங்கள் ஒவ்வொருவருக்கும்... இப்பொழுது நான் ஆவியில் நிறைந்திருப்பதை உணருகிறேன். நான் பரிசுத்த ஆவியை உணருகிறேன். அவர் இங்கிருப்பதை அறிகிறேன். அவர் இங்கிருக்கிறார் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அவரை நான் காண்கிறேன். அவர் இங்கிருப்பதை அறிகிறேன். அவர் - அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் - அசைவதைக் காண்கிறேன். மகிமை!... அவருடைய தோற்றம், அவருடைய தெய்வீக பிரசன்னம்... அவருடைய கம்பீரமான தோற்றம். தேவனே, இவர்கள் மேல் அசைவாடுவீராக. யாருமே இழந்து போக வேண்டாமென்று வேண்டிக் கொள்கிறேன். தேவனுக்கு மகிமை!